உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கென்யாவில் 42 பெண்களைக் கொன்ற சீரியல் கொலைகாரன் கைது

கென்யாவில் 42 பெண்களைக் கொன்ற சீரியல் கொலைகாரன் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நைரோபி: கென்யாவில் 42 பெண்களை கொலை செய்த சீரியல் கொலைகாரனை போலீசார் கைது செய்துள்ளனர்.ஜோமைசி கலுஷா(33) என்ற அந்த நபர், 2022 முதல் மனைவி உட்பட 42 பெண்களை கொலை செய்ததை போலீசிடம் ஒப்புக் கொண்டுள்ளார். அவர்களை கொடூரமாக கொலை செய்ததுடன், 9 பெண்களின் உடலை சிதைத்து அனைத்து உடல்களையும், செயல்படாத குவாரிக்குள் வீசி உள்ளது அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்கள் அனைவருக்கும் 18 முதல் 30 வயது வரை இருக்கும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.போலீசுக்கு தெரியாமல் 42 பேரை கொலை சம்பவம் நிகழ்ந்தது என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கொலையாளியின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், லேப்டாப், 10 மொபைல் போன்கள், அடையாள அட்டைகள் மற்றும் பெண்களின் உடைகளை கைப்பற்றி உள்ளனர். குவாரியில் உடல்களை தேடி வரும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R S BALA
ஜூலை 16, 2024 18:42

பெண்களை எப்படிடா உனக்கு கொலை செய்ய மனசு வந்துச்சு..சைக்கோ பயலே.


ram
ஜூலை 16, 2024 16:41

அமைதி மார்க்கம்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 16, 2024 13:39

மாடல் ..........


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி