உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜாபர் எக்ஸ்பிரஸ் குண்டு வைத்து தகர்த்ததில் பலர் காயம்

ஜாபர் எக்ஸ்பிரஸ் குண்டு வைத்து தகர்த்ததில் பலர் காயம்

இஸ்லாமாபாத்,:நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ஆட்சிக்கு உட்பட்ட பலுசிஸ்தான் மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி, பலுச் விடுதலை படையினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா மற்றும் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் பெஷாவர் ஆகிய நகரங்களை இணைக்கும் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து, அவ்வப்போது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம், 450 பயணியருடன் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலுச் கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர். இந்த நிலையில் ஜாபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரயி லை தகர்க்க, சிந்து -- பலுசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் பகுதியில், தண்டவாளத்தில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருந்தது. அப்போது குவெட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த ரயில் வந்தபோது குண்டு வெடித்தது. இதில் ஆறு பெ ட்டிகள் தடம் புரண்டன. இந்த தாக்குதலில், ரயிலில் இருந்த பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு மற்றும் பாதுகாப்புப் படையினர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ