உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்

அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென சூறாவளி ஏற்பட்டது. கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மிசோரி மாகாணத்தில் செயின்ட் லூயிஸ் நகரில் மட்டும் 5,000 கட்டடங்கள் சேதம் அடைந்தன. சூறாவளி தாக்கியதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதம் அடைந்தன. பல இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. சூறாவளி தாக்குதலில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது கென்டக்கி, மிசோரியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை சூறாவளியால் 27 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Amar Akbar Antony
மே 18, 2025 11:24

மிகவும் முன்னேறிய நாடு விண்வெளியில் புகழ்பெற்ற நாசா என்றிருந்தும் சூறாவளி வருகிறதென்பது அறியாமல் போய்விட்டதா?


vijay
மே 18, 2025 08:57

இடிந்தெல்லாம் விழாது. சரிந்து விழுந்து இருக்கும் இல்லாட்டி சூறாவளி வீடுகள் பெயர்த்து வீசப்பட்டிருக்கும். அங்கு பெரும்பாலான தனி வீடுகள் மரத்தில் செய்து கட்டப்பட்டிருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை