உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 58 அதிகாரிகளுடன் பாலியல் உறவு: சீனாவில் அழகான கவர்னருக்கு சிறை

58 அதிகாரிகளுடன் பாலியல் உறவு: சீனாவில் அழகான கவர்னருக்கு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிஜீங்: சீனாவில், 'அழகான பெண் கவர்னர்' என்றுஅழைக்கப்படும் கவர்னர் ஜாங் யாங்குக்கு, 58 அதிகாரிகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டது மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நம் அண்டை நாடான சீனாவில், அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் சீன கம்யூ., கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு, குய்சோவ் மாகாணத்தின் கியானன் நகரத்தின் கவர்னராக பதவி வகித்தவர், ஜாங் யாங், 52. இவருக்கு, 'அழகான கவர்னர்' என்ற செல்லப் பெயரும் உண்டு. 22 வயதில் சீன கம்யூ., கட்சியில் சேர்ந்த இவர், படிப்படியாக உயர்ந்து, சீன அரசில் உயர்ந்த பதவியை அடைந்தார். இதையடுத்து, கியானன் நகரத்தின் கவர்னராக, ஜாங் யாங் நியமிக்கப்பட்டார். இவர், விவசாயிகளுக்கு உதவும் நோக்கில், பழங்கள் மற்றும் விவசாய சங்கத்தைத் துவங்கி பிரபலமானார். மேலும், தன் சொந்த பணத்தை செலவழித்து வயதானவர்களுக்கு உதவினார்.கடந்த ஜனவரியில், ஜாங் யாங் குறித்த ஆவணப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், தனக்கு விருப்பமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்க, அவர் லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், தன்னுடன் நெருங்கிப் பழகிய தொழிலதிபருக்கு, உயர் தொழில்நுட்ப தொழிற்பேட்டையில் நிலத்தை மேம்படுத்த, ஜாங் யாங் ஒப்புதல் அளித்ததும் தெரிய வந்தது. தன்னுடன் வேலை பார்த்த 58 அதிகாரிகளுடன், ஜாங் யாங் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும் அந்த ஆவணப் படத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒருசில அதிகாரிகளை மிரட்டி, வலுக்கட்டாயமாக அவர் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டின்படி, கடந்த ஏப்ரலில், ஜாங் யாங் கைது செய்யப்பட்டார். இந்த மாத துவக்கத்தில், கியானன் நகர கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜாங் யாங், சீன கம்யூ., கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.இந்நிலையில், வழக்கு விசாரணையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சமீபத்தில், ஜாங் யாங்குக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

kulandai kannan
செப் 22, 2024 13:09

டெல்லியில் அதிஷி பதவியேற்ற நேரத்தில் இந்த செய்தி தேவையா!!


Velan Iyengaar
செப் 22, 2024 08:12

சீன நாட்டு A1


subramanian
செப் 22, 2024 07:58

புழுக்காது போலிருக்கே. வெளியே தெரியாமல் இன்னும் பல நூறு இருக்கும்.


Kasimani Baskaran
செப் 22, 2024 07:01

சிறிய ஊழல் குற்றச்சாட்டுக்கே மரண தண்டனை கொடுத்து ஒரு எலும்பைக்கூட உறவினர் என்று யார் வந்தாலும் கூட கொடுக்க மாட்டார்கள். அப்படியிருக்கையில் இதை ஒரு பொய் செய்தி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வேளை மிக உயரியவருடன் ஓவராக கும்மியடித்து இருந்தால் போனால் போகிறது என்று விட்டு வைத்திருக்க வாய்ப்பு உண்டு.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 22, 2024 06:55

திராவிட மாடல் அவ்வளவு தூரம் பரவியிருக்குதுங்களா ????


RAMAKRISHNAN NATESAN
செப் 22, 2024 06:11

புழுத்து போயிடாது ????


chandrakumar
செப் 22, 2024 05:55

பரவாயில்லை சீன அதிபர் மிக நல்லவர் போலும் இதுவே வட கொரியா வாக இருந்திருந்தால் இன்னேரம் அப்பணியை தூக்கி இருப்பார்


Mani . V
செப் 22, 2024 05:20

ம், திருப்பூர் சத்யாவுக்கு வந்த சத்திய சோதனை.


Bala
செப் 22, 2024 01:37

திருட்டுக் கொலைகாரத் தெலுங்குன் கட்டுமரத்தின் மரபணு எப்படிச் சீனா பெண்மணிக்கு வந்தது திருட்டு வானுருதியில் சீனாவுக்குச் சென்று இருப்பானோ?


மோகனசுந்தரம்
செப் 22, 2024 07:38

அருமை அருமை அருமை


புதிய வீடியோ