மேலும் செய்திகள்
இந்திய வம்சாவளி மேயர் மம்தானி vs டிரம்ப் மோதலுக்கு முற்றுப்புள்ளி
8 hour(s) ago | 15
மியான்மரில் சிக்கி தவித்த 370 இந்தியர்கள் மீட்பு
11 hour(s) ago | 3
புதுடில்லி: ஜனநாயகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மம்தானி, டிரம்ப் சந்திப்பை வரவேற்று காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் பதிவிட்டுள்ளார். நியுயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோரான் மம்தானி. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்க வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டிரம்பை முதல் முறையாக சந்தித்து பேசினார். மம்தானி, டிரம்ப் சந்திப்பு அமெரிக்க அரசியலில் அனைவராலும் உற்று பார்க்கப்பட்டது. அதற்கான காரணமும் இருக்கிறது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, டிரம்ப் ஆகிய இருவரின் அரசுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பியவர் மம்தானி. இவரின் கடும் எதிர்ப்பால் அதிருப்தி அடைந்த டிரம்ப், மம்தானியை கம்யூனிஸ்ட் என்றும், ஹமாஸ் ஆதரவாளர் என்றும் குற்றம்சாட்டி இருந்தார். தேர்தலில் போட்டியிட்ட தருணத்தில் யாரும் அவருக்கு ஓட்டு போட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். ஒருவருக்கு ஒருவர் கடும் விமர்சனங்களால் மோதிக் கொண்ட இவ்விருவரின் சந்திப்பை, காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் வரவேற்றுள்ளார்.இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; ஜனநாயகம் என்பது இப்படித்தான் செயல்பட வேண்டும். தேர்தலின் போது எந்த வார்த்தை ஜாலங்களும் இல்லாமல் உங்கள் கருத்தை முன் வைத்து போராடுங்கள். தேர்தல் முடிந்த பின்னர், நாட்டின் பொதுவான நலன்களை நிறைவேற்ற, மக்களிடம் அளித்த வாக்குறுதிகளின் படி ஒத்துழைப்புடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.இதுபோன்ற சந்திப்புகளை நான் இந்தியாவில் அதிகம் பார்க்க விரும்புகிறேன். என் அளவிலான பங்களிப்பையும் செய்ய முயற்சித்து வருகிறேன்.இவ்வாறு சசிதரூர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.அண்மைக்காலமாக, பாஜ தலைவர்களை அதிகம் புகழ்ந்தும்,. காங்கிரசை விமர்சித்தும் சசிதரூர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அவர் தம்மை மாற்றிக் கொள்ளவில்லை.
8 hour(s) ago | 15
11 hour(s) ago | 3