உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டுக்கு தீ வைப்பு; வங்கதேசத்தில் பதற்றம்

ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டுக்கு தீ வைப்பு; வங்கதேசத்தில் பதற்றம்

டாக்கா: வங்கதேச முன்னாள் அதிபரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான முஜிபுர் ரஹ்மானின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு வெடித்த வன்முறை காரணமாக அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n0xfyxjs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர்ந்து, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இடைக்கால அரசு, எதிர்வரும் தேர்தலில் அவாமி லீக் கட்சியை போட்டியிட அனுமதிக்கப்படாது என்று அறிவித்தது. இதனிடையே, தன்னுடைய கட்சியினருடன் ஷேக் ஹசீனா நேற்று ஆன்லைன் மூலமாக உரை நிகழ்த்தினார். அப்போது, தங்களின் கட்சியை தேர்தலில் போட்டியிட அனுமதிக்காத முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை எதிர்த்து போராட்டம் நடத்துமாறு அவர் அழைப்பு விடுத்தார். இந்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், ஷேக் ஹசீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவாமி லீக் கட்சியை தடை செய்யக்கோரியும் வன்முறைகள் வெடித்தன.முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம் மற்றும் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இது சர்வதிகாரம் மற்றும் பாசிசத்தின் அடையாளம் எனக் கூறி, ஜே.சி.பி., இயந்திரங்களுடன் திரண்ட அவர்கள், வீடு மற்றும் நினைவிடத்திற்கு தீவைத்தனர். வீட்டின் 2வது மாடியில் ஏறி, கடப்பாரைகள் மற்றும் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவப்படத்தை சேதப்படுத்தினர். இதனால், வங்கதேசத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஷேக் ஹசீனா, 'வங்கதேச மக்களிடம் நான் நீதி கேட்கிறேன். நான் நாட்டுக்காக எதையும் செய்யவில்லையா? பிறகு எதற்காக என்னை இப்படி அவமதிக்க வேண்டும்? அடையாளங்களை அழிக்கலாம். ஆனால், வரலாற்றை அழிக்க முடியாது. நிச்சயம் இதற்கு ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Kanns
பிப் 07, 2025 08:17

Destroy Enemies of Humanity& WorldPeace by All Means Before they Destroy Humanity& WorldPeace. What UN/World Bodies are Doing????


Nagarajan D
பிப் 06, 2025 17:33

சோரோஸிடம் சோரம் போனவனுங்க பட்டியலில் பாரதத்தின் கோமாளி பப்பு, வங்காளத்தில் இந்த யூனிஸ் இவனுங்கல்லாம் பிறந்த தேசத்திற்கு விசுவாசமாக இருந்ததில்லை


Bhaskaran
பிப் 06, 2025 16:42

இந்திய பிரிவினையின்போது வாங்கத்தலைவன் சுஹ்ராவர்தி en Bava உடன் உடன் சேர்ந்து ஹிந்துக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டவன் இந்த முஜிபுர் ரகுமான் இவன் வீட்டை தரைமட்டம் ஆக்க வேண்டும்


நிக்கோல்தாம்சன்
பிப் 06, 2025 15:43

முதுகில் குத்துபவர்கள் என்று நான் முன்னரே பதிவிட்டு இருந்தேன் , உண்டவீட்டுக்கு ரெண்டகம் செய்வதில் வல்லவர்கள் மர்ம நபர்களோ ?


Sivagiri
பிப் 06, 2025 13:43

அவ்வளவுதான் - - - பங்களாதேஷ் கதை முடிஞ்சிபோச்சு - - இனி அது பங்களாதேஷ் இல்லை , கிழக்கு பாகிஸ்தான் - - விரைவில் அறிவிப்பு வரலாம் - - சீனா ஆதரிக்கலாம் - இப்பொது இஸ்ரேலை சுற்றி வளைத்துள்ள இஸ்லாமிய தீவிரவாத நாடுகளும் இந்தப்பக்கம் கவனம் செலுத்தலாம் . . அனைத்துமே இந்தியாவுக்கு எதிரான ஆப்புதான் - - - இஸ்ரேலுக்கு அமெரிக்க ஐரோப்பிய சப்போர்ட் இருக்கும் , ஆனால் இந்தியாவுக்கு , பூமியில் ஒரு சப்போர்ட்டும் கிடைக்காது - வானத்தில் இருந்து வேறு கிரகத்தில் இருந்து வேண்டுமானால் உதவி கிடைக்கலாம் . . .


N Sasikumar Yadhav
பிப் 06, 2025 13:31

உலகில் அமைதியை விரும்பாத ஒரே மார்க்கம்


sankaranarayanan
பிப் 06, 2025 11:44

காசா இடத்தை எடுத்துகொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பு ஏன் இந்த அவல நிலையில் உள்ள பங்காள தேசத்தை உடனே எடுத்துக்கொண்டு சீரமைக்கக்கூடாது


Ganapathy
பிப் 06, 2025 11:15

ட்ரம்பு உதவிகளை நிறுத்தியதே இவனுங்க கைல காசு போகாம இருக்கத்தான்


ram
பிப் 06, 2025 10:53

நன்றி கெட்டவர்கள் இதில் படித்தது பிடிக்காதது என்று வித்தியாசம் கிடையாது.


HIGHCOURT RAJ R
பிப் 06, 2025 10:08

பெரும்பான்மையான இசுலாமிய மக்கள் இப்படி தான் இருப்பார்களா மனசாட்சி இரக்கம் நன்றி என எதுவுமே இல்லாதவர்களாக ..இதற்கு கிறிஸ்துவர்கள் இந்துக்கள் பரவாயில்லையோ புத்த மக்களும் இப்படி தான் போல அதனால் தான் இலங்கையில் ஈவு இரக்கமே இல்லாமல் குழைந்தைகளை கொன்றார்கள்...இந்தியாவில் இசுலாமியர்களை தவிர மாற்று மத மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இந்தியா ஜனநாயக நாடாக இருக்க வேணுமாயின் இந்துக்களோ கிறிஸ்துவர்களோ பெரும்பான்மை கொண்டு இருக்க வேண்டுமோ என அண்டை நாட்டில் நடப்பதை பார்த்து தெரிகிறது மத வெறியில் நான் சொல்லவில்ல ஆனால் சுற்றி நடக்கும் சம்பவங்களை பார்த்தால் சொல்ல தோணுகிறது மன்னன்னிக்கவும்


subramanian
பிப் 06, 2025 11:30

ஐகோர்ட் ராஜா, இந்தியாவில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் சேர்ந்து கொண்டு நமக்கு துரோகம் செய்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை