உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நியூயார்க் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி, 8 பேர் காயம்

நியூயார்க் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி, 8 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: நியூயார்க்கில் உணவகம் ஒன்றில் மர்ம நபர் இன்று காலை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக நியூயார்க் சிட்டி போலீசார் கூறியதாவது; ப்ரூக்லைன் பகுதியில் உள்ள உணவகத்தின் உள்ளே இன்று (ஆக.,17) அதிகாலை 3.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதில், 27 மற்றும் 35 வயதுடைய நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 3வது நபரின் வயது குறித்த தகவல் தெரியவில்லை. இதுவரையில் குற்றவாளி யார் என்று அடையாளம் காணப்படாததால், கைது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை. சம்பவ இடத்தில் 36 தோட்டாக்களின் உறைகள் கண்டெடுக்கப்பட்டன. 8 பேர் பலத்த காயமடைந்தனர். என்ன நடந்தது, துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, எனக் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankaranarayanan
ஆக 17, 2025 20:50

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை அடியோடு ஒழித்தால்தான் அமைதிக்கான நோபல் பரிப்பெற தகுதி என்றே உலகமே டிரம்புக்கு சொல்ல வேண்டும்.அப்போதுதான் அவருக்கே தனது சொந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று புரியும்.


என்றும் இந்தியன்
ஆக 17, 2025 20:33

இது தான் உண்மையான அமெரிக்க நிலைமை. அமெரிக்கா முஸ்லீம் நாடாக ஒரு ஈரான் ஆப்கானிஸ்தான் போல மாறிக்கொண்டிருக்கின்றது???யாரு ஆட்சி செய்வது டிரம்ப் ???ட்ரம்பின் வண்டவாளம் மிக மிக தெளிவாக தெரிகின்றது


தென்காசி ராஜா ராஜா
ஆக 17, 2025 18:41

இங்கே பொம்மை துப்பாக்கி மாதிரி அடிக்கடி இந்த மாதிரி சம்பவம் நடக்கிறது இதை தடுக்க முடியலை அடுத்த நாட்டுக்குள் மூக்கு நுழைக்கிறது


Ramesh Sargam
ஆக 17, 2025 18:19

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்: டிரம்ப். அப்படி என்றால் இந்த துப்பாக்கி சூட்டை ஏன் நிறுத்தமுடியவில்லை?


புதிய வீடியோ