உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தப்பு தப்பா காட்டுறீங்க…: கூகுளுக்கு டிரம்ப் எச்சரிக்கை

தப்பு தப்பா காட்டுறீங்க…: கூகுளுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: 'கூகுள் தேடுதலில், தன்னை பற்றி மோசமான விஷயங்கள் மட்டுமே காட்டுவதாகவும், அதிபராக பதவியேற்றால் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்வேன்' என்றும், குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாலியல் வழக்கு, ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்தல், 2020ம் ஆண்டு அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி என அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில், 'Donald Trump presidential race 2024.' என தேடினால் மோசமான விஷயங்கள் மட்டுமே வருவதாக அவரது பிரசார குழுவினர் கூறியுள்ளனர்.இதனையடுத்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; கூகுள் இணையதளத்தில் என்னை பற்றி தேடினால், மோசமான விஷயங்கள் மட்டுமே காட்டுகிறது. ஆனால், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் பற்றி நேர்மறையான விஷயங்கள் பற்றி மட்டுமே காட்டப்படுகிறது. இது சட்டவிரோதமான நடவடிக்கை. இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிடும் என நம்புகிறேன்.இது நடக்காவிட்டால், அமெரிக்க சட்டப்படி நான் அதிபராக பதவியேற்ற பிறகு கூகுள் மீது வழக்கு தொடர்வேன் என கேட்டுக் கொள்வேன். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.

கூகுள் மறுப்பு

ஆனால், இதனை மறுத்துள்ள கூகுள் நிறுவனம், தேடுதலில் கிடைக்கும் தகவலில் இருவரது பிரசார இணையதளங்களும் முதலிலேயே காட்டப்படுகிறது. எந்த வேட்பாளருக்கு ஆதரவாக முடிவுகள் காட்டும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Indian-இந்தியன்
செப் 28, 2024 09:54

கூகுல் . தேசவிரோதிகளுக்கு சாதகமாக இருக்கிறார்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 28, 2024 09:32

சூப்பரோ சூப்பர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை