உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வானில் பறக்கும் போது திடீரென கிளம்பிய புகை; அவசர அவசரமாக தரையிறங்கிய அமெரிக்க விமானம்

வானில் பறக்கும் போது திடீரென கிளம்பிய புகை; அவசர அவசரமாக தரையிறங்கிய அமெரிக்க விமானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லாஸ் வெகாஸ்: வானில் பறக்கும் போது திடீரென புகை கிளம்பிய நிலையில், லாஸ் வெகாஸ் விமான நிலையத்தில் அமெரிக்க பயணிகள் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாடுகளில் ஒன்றான நெவாடாவில் உள்ள லாஸ் வெகாஸ் விமான நிலையத்தில் இருந்து வட கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு, 153 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அமெரிக்கன் ஏர்லைன் விமானம் புறப்பட்டது. வானிலை பறக்கத் தொடங்கிய சிறிது நிமிடங்களிலேயே இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு, புகை வெளியேறியது. இதனை உணர்ந்த விமானி, சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை மீண்டும் லாஸ் வெகாஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கினார். இதனால், பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பிறகு, அவர்கள் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'விமானத்தில் கோளாறு ஏற்பட்ட போதிலும் பயணிகளை பத்திரமாக அழைத்து வந்த எங்கள் விமானக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பயணிகளின் திட்டமிட்ட பயணத்தை விரைந்து செயல்படுத்துவோம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விமானம் வானில் பறக்க தொடங்கும் போது புகை வெளியேறிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூன் 26, 2025 12:41

ஏர் இந்தியா விமான நிறுவன விமானங்களில் மட்டும் குறை இல்லை. உலகில் உள்ள பல நாட்டு விமான நிறுவனங்கள் விடும் விமானங்களில் பிரச்சினை இருக்கிறது. இதற்கு முதல் காரணம், முறையான பராமரிப்பு இல்லாததுதான்.


Yasararafath
ஜூன் 26, 2025 12:21

அனைத்து விமானங்களையும் ரத்து செய்ய வேண்டும்


புதிய வீடியோ