உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை மீறிய சீனா: டிரம்ப் கண்டனம்

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை மீறிய சீனா: டிரம்ப் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சீனாவைக் காப்பாற்ற அந்நாட்டுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் செய்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டது என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.அமெரிக்கா பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருகிறது என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனையடுத்து சீன பொருட்களுக்கு அதிர வரி விதிக்க துவங்கினார். இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதிக்க, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் துவங்கியது. ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்தது. இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தன. மேலும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இரண்டு வாரங்களுக்கு முன்பு, சீனா பெரிய பொருளாதார ஆபத்தில் இருந்தது. நான் நிர்ணயித்த அதிக வரி விதிப்பால், உலகின் முதலிடத்தில் உள்ள அமெரிக்க சந்தையில் சீனா வர்த்தகம் செய்வது கிட்டத்தட்ட சாத்தியம் அற்றதாகிவிட்டது. இதனால், சீனாவுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. அங்கு பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. உள்நாட்டில் அமைதியின்மை இருந்தது. என்ன நடக்கிறது என்று நான் பார்த்தேன். அது எங்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கும் பிடிக்கவில்லை. மிகவும் மோசமான சூழ்நிலையாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அதில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக நான் சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தேன். இந்த ஒப்பந்தம் காரணமாக சீனா நிம்மதி அடைந்தது. வழக்கம்போல் வணிகத்திற்கு திரும்பியது. அங்கு அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அது தான் நல்ல செய்தி. மோசமான செய்தி என்னவென்றால், அது சிலருக்கு ஆச்சர்யமாக இருக்காது. எங்களுடனான ஒப்பந்தத்தை முற்றிலுமாக சீனா மீறி உள்ளது. மிகவும் நல்லவர்களாக இருந்ததற்கு இப்படியா?. இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.அதேநேரத்தில் எந்த வகையில், இந்த ஒப்பந்தத்தை சீனா மீறியது என்பது பற்றி டிரம்ப் தெளிவாக விளக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Veluswamy Aravintraj
மே 31, 2025 06:03

சரியான பயித்தியகாரன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்


Columbus
மே 31, 2025 01:01

In his first term Trump was careless in choosing his cabinet members. The cabinet had been infiltrated by the Deep State and they ran their agenda. But this time, Trump has taken full care and one can see the results.


Ramesh Sargam
மே 30, 2025 20:42

டிரம்ப் முதல்முறை அதிபராக இருந்தபோது இந்த அளவு அலப்பறை செய்ய வில்லை. திடீரென்று இந்தமுறை ஏன் இந்த அளவுக்கு தாங்கமுடியாத அலப்பறை?


r ravichandran
மே 30, 2025 20:28

வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு இருக்கிறார் டிரம்ப்.


முக்கிய வீடியோ