உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை

லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: தென் ஆப்ரிக்கா அணி, முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. ஆஸி., அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்தது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான பைனல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில், ' நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212, தென் ஆப்ரிக்கா 138 ரன்கள் எடுத்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rufsaign&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மூன்றாவது நாளில் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ' ஆல் அவுட்' ஆனது. 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்கா அணி, 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 213 ரன் எடுத்திருந்தது. மார்க்ரம்(102), பவுமா (65) அவுட்டாகாமல் இருந்தனர். 4வது ஆட்ட நாள் துவங்கியதும் பவுமா, கூடுதலாக ஒரு ரன் மட்டும் எடுத்து 66 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். டிரிஸ்ட்ன் ஸ்டப்ஸ் 8 ரன்களிலும் அவுட்டாகினர்.இருப்பினும் மார்க்ரம், டேவிட் பெடின்ஹம் இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். மார்க்ரம் 136 ரன்கள் எடுத்து அவுட்டானார். அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. கடந்த 27 ஆண்டுகளில் தென் ஆப்ரிக்கா அணி இதுவரை எந்த ஐ.சி.சி., நடத்தும் எந்தவொரு தொடரிலும் வென்றது கிடையாது. தற்போது முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதனை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வல்லவன்
ஜூன் 14, 2025 21:58

தென் ஆப்பிரிக்காவிற்கு ராசியில்லாத நம்பர் 27. நெல்சன் மண்டேலா சிறையில் இருந்த வருடங்கள் 27. தற்போது கோப்பையை வென்றதும் 27 ஆண்டுகள் கழித்து


ஆரூர் ரங்
ஜூன் 14, 2025 21:56

பெங்களூருவில் பாராட்டு விழா ரெடியா?.


M S RAGHUNATHAN
ஜூன் 14, 2025 20:58

What is surprising is all three championship finals have been won by teams from SOUTHERN HEMISPHERE. CONGRATULATIONS TO SA. AT LAST THEY SHRUGGED AWAY THE TAG OF CHOKERS.


sarvesh
ஜூன் 14, 2025 20:23

congratulations to the South African team.


TR BALACHANDER
ஜூன் 14, 2025 18:59

நீண்ட நாள் கனவு மகுடம் சூட்டி உள்ளது .....வாழ்த்துக்கள்


Naresh Kumar
ஜூன் 14, 2025 18:07

வாழ்த்துக்கள் ..இவர்கள் போன வாரம் வெற்றி பெற்ற அணியை போல் பகட்டு வேஷம் போடாமல் எவ்வளவு அமைதியாக தங்களுடைய வெற்றியை கொண்டாடுகிறார்கள் பார்த்தீர்களா இதுதான் பண்பு என்பது பண்பட்ட இதயம் என்பது. வாழ்த்துக்கள் தென் ஆப்பிரிக்கா அணிக்கு.


lana
ஜூன் 14, 2025 17:39

வாழ்த்துக்கள். குறிப்பாக அதன் கேப்டன் bavuma சராசரி ஐ விட குறைவான உயரம். ஆனால் அவரின் உழைப்பு மற்றும் இந்த அர்ப்பணிப்பு அவரை மிகவும் பெரிய அளவில் உயர்த்தி விட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை