உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 8 ஆண்டு சிறைக்குப் பின் பிஸ்டோரியசிற்கு பரோல்

8 ஆண்டு சிறைக்குப் பின் பிஸ்டோரியசிற்கு பரோல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரிட்டோரியா : எட்டு ஆண்டு சிறைத்தண்டனைக்குப் பின் பிஸ்டோரியஸ் பரோலில் வெளியே வந்தார்.தென் ஆப்ரிக்க மாற்றுத் திறனாளி தடகள வீரர் பிஸ்டோரியஸ் 37. கடந்த 2013, காதலர் தினத்தில் (பிப்., 14), தனது வீட்டில் காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்றார்.இவருக்கு 13 ஆண்டு, 5 மாதம் தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 2014, அக்டோபரில் சிறை சென்றார். பின் 2015 அக்டோபரில் வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார். 2016, ஜூலை முதல் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். இங்கு 'டிராக்டர்' ஓட்டினார், நுாலகத்தில் பணிபுரிந்தார், சக கைதிகள் அறைகளை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டார்.இதனிடையே, தென் ஆப்ரிக்க சட்டப்படி தண்டனையில் பாதி நாள் சிறையில் இருந்தால் போதும்,பின் பரோலில் வெளியே வரலாம். இதன் படி, 8 ஆண்டுக்கு மேல் சிறையில் இருந்தபிஸ்டோரியசிற்கு பரோல் வழங்கப்பட்டது.நேற்றுசிறையில் இருந்து வெளியே வந்தார்.இவர் பிரிட்டோரியாவின் புறநகர் பகுதியில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்றார். தண்டனை காலம் முடியும் வரை (2029) இங்கு தான் தங்கவுள்ளார். இக்காலகட்டத்தில் மீடியாவை சந்திக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது உட்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அசோகன்
ஜன 06, 2024 11:37

இந்த செய்தி தேவையா..... கொலைகாரனுக்கு நீங்கள் விளம்பரம் செய்கிறீர்களா


Kalyanaraman
ஜன 06, 2024 07:56

2013 ல் நடந்த குற்றத்திற்கு விசாரண முடிந்து, தீர்ப்பையும் அளித்து, தண்டனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது - இவை அனைத்தும் இரண்டு வருடங்களில். நமது நீதிபதிகளை தென்னாப்பிரிக்காவுக்கு, சுறுசுறுப்பாக வழக்குகளை முடிப்பதற்கு கற்றுக் கொள்ள அனுப்ப வேண்டும். நீதித்துறையை அசிங்கப்படுத்தும் நீதிபதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி