உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தமிழக மீனவர்கள் 14 பேரை விடுவித்தது இலங்கை

தமிழக மீனவர்கள் 14 பேரை விடுவித்தது இலங்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு விடுவித்தது.இலங்கைக்கு பிரதமர் மோடி சென்று இருந்தார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பில் நடந்த நிகழ்ச்சியில், அதிபர் அநுரா குமார திசநாயகேவை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது மீனவர்கள் பிரச்னைகள் குறித்து இலங்கை அதிபரிடம் மோடி பேச்சு நடத்தினார்.அதுமட்டுமின்றி, அவர் இலங்கைக்கு இந்திய அரசு உறுதுணையோடு இருக்கும் என உறுதி அளித்தார். மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடி முன்வைத்தார். இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதம் நடத்தியதாக தெரிவித்தார்.மேலும், அவர் 'மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்' என்றார். இலங்கை பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துவிட்டு பிரதமர் மோடி கிளம்பினார்.இந்நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு விடுவித்தது. இவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள். இதற்கான ஏற்பாடுகள் அனைத்து விரைவாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஏப் 06, 2025 14:41

தமிழக மீனவர்களுக்கு விடியல் தந்த கர்த்தரின் சீடர் விடியல் சார் வாழ்க


தமிழன்
ஏப் 06, 2025 13:24

இதெல்லாம் அரசியல் ஸ்டண்ட் இந்த மாதிரி பல சம்பவங்கள் பார்த்தாச்சு இதெல்லாம் 4 நாட்கள் கூட தாங்காது தேர்தல் வருதுல்ல அதான் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுறானுக நிரந்தரமாக தீர்வு காண 2 மேதாவிகளும் அமர்ந்து பேசி உடன்படிக்கை ஏற்படுத்தி அதன்படி நடந்து கொள்ள வேண்டும் இப்படி செய்தால் ஒழிய இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது


Ramesh Sargam
ஏப் 06, 2025 12:32

நாளைக்கே மீண்டும் இலங்கை ரானுவத்தினர் இந்திய மீனவர்களை மீண்டும் பிடித்து துன்புறுத்துவார்கள் பாருங்க. இந்த மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு காணவேண்டும்.


கண்ணா
ஏப் 06, 2025 12:21

எங்களை இலங்கை அரசிடமிருந்து மீட்ட எங்கள் தளபதி ஸ்டாலின் ஐயாவிற்கு நன்றி நன்றி...ஏய் யாரங்கே நாளைக்கே 10000 போஸ்டர் ரெடி பண்ணி எல்லா ஊருலேயும் ஒட்ட ஏற்பாடு பண்ணுங்க.


ஆரூர் ரங்
ஏப் 06, 2025 11:55

ஸ்டிக்கர் ரெடி. ஆனா உப்புத்தண்ணீரில சரியா ஒட்ட முடியல.


sridhar
ஏப் 06, 2025 11:42

நேற்றிரவு ஸ்டாலின் தன் கனவில் இலங்கை அதிபரை மிரட்டியதால் இன்று தமிழக மீனவர்கள் விடுதலை .


புதிய வீடியோ