உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இலங்கையில் புதிய வரலாறு; இடதுசாரி அனுரா அதிபராக தேர்வு!

இலங்கையில் புதிய வரலாறு; இடதுசாரி அனுரா அதிபராக தேர்வு!

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் அனுரா குமார திசநாயகே, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முதல் விருப்ப ஓட்டுகளில் யாருக்கும் 50 சதவீதம் கிடைக்காத நிலையில், இரண்டாம் விருப்ப ஓட்டுக்கள் அடிப்படையில் வெற்றியாளரை தேர்வு செய்தது தேர்தல் ஆணையம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j7tyghhm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தெற்காசியாவில், இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கைத்தீவு, மேற்கு நாடுகளுக்கு செல்லும் கடல் வழியில் அமைந்துள்ளது. இந்தியாவுக்கு அருகே அமைந்திருப்பதாலும், இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் இருப்பதாலும், சீனாவும் தளம் அமைக்க ஆர்வம் காட்டும் நாடாக இலங்கை உள்ளது.இப்படி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, 30 ஆண்டுக்கும் மேலாக உள்நாட்டுப் போரில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிந்த பிறகு, பேராசை பிடித்த ராஜபக்சே குடும்பத்தினரால் நாடு சந்தித்த சிரமங்கள் ஏராளம்.அவற்றை கடந்து, இப்போது புதிய தேர்தலை நடத்தி முடித்துள்ளது இலங்கை. தற்போதைய அதிபர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் பின்புலம் கொண்ட தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் இடையே முக்கிய போட்டி நிலவியது.முதல் விருப்ப ஓட்டு எணணிக்கை முடிவில், அனுரா 39 சதவீதம் ஓட்டுகளும், சஜித் 34 சதவீதம் ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இரண்டாம் விருப்ப ஓட்டு எண்ணிக்கை முடிவில், அனுராவுக்கு 42.31 சதவீதம் ஓட்டுகளும், சஜித்துக்கு 32.76 சதவீதம் ஓட்டுகளும் கிடைத்திருந்தன.இதன் அடிப்படையில் அனுரா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் மூலம் இலங்கை வரலாற்றில் அதிபர் பதவியை கைப்பற்றிய முதல் இடதுசாரி என்ற சிறப்பை அனுரா திசநாயகே பெற்றார்.

யார் இந்த அனுரா திசநாயகே!

இலங்கை அதிபர் தேர்தல் களத்தில் முன்னணியில் இருக்கும் அனுரா குமார திசநாயகே, 56, தற்போதைய பார்லிமென்டில் எம்.பி.,யாக இருக்கிறார். இவர் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற ஜே.வி.பி., கட்சியின் தலைவர். ஜனதா விமுக்தி பெரமுனா (தமிழில், மக்கள் விடுதலை முன்னணி என்று பொருள்) இலங்கையில் செயல்படும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சித்தாந்த அடிப்படையிலான கம்யூனிஸ்ட் கட்சி. அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிகளில் இரண்டு முறை ஈடுபட்ட இந்த கட்சி, இப்போது தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளது.இந்த கட்சியின் தலைவரான அனுரா குமார திசநாயகே, 1968ல் அனுராதபுரம் மாவட்டத்தில் கூலித்தொழிலாளிக்கு மகனாக பிறந்தவர். 1995ல் இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். 1987 முதலே ஜனதா விமுக்தி பெரமுனாவில் இணைந்து செயல்பட்டு வந்தார். 1995ல் சோஷலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராகவும், ஜனதா விமுக்தி பெரமுனாவின் மத்தியக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

அமைச்சராக இருந்தவர்

2000 ஆண்டு முதல் எம்.பி.,யாக இருக்கிறார். சந்திரிகா குமாரதுங்கா அரசில், வேளாண்மை, கால்நடை மற்றும் பாசனத்துறை அமைச்சராக 2004 முதல் 2005 வரை பதவி வகித்தார். 2005ல் சந்திரிகா அரசில் இருந்து பிற ஜே.வி.பி., அமைச்சர்களுடன் ராஜினாமா செய்தார்.2015 முதல் 2018 வரை, எதிர்க்கட்சிகளின் தலைமை கொறாடா ஆகவும் இருந்தவர். 2019ல் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை தோற்றுவித்தார். அதன் வேட்பாளராக, அப்போது நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவருக்கு 3 சதவீதம் ஓட்டுக்களே கிடைத்தன.

ஐ.எம்.எப்., நிபந்தனைக்கு எதிர்ப்பு

கோத்தபயா ராஜபக்சே அதிபராக தேர்வான நிலையில், கோவிட் தொற்று ஏற்பட்டது; கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், கோத்தபயா அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. அவற்றை முன்னின்று நடத்தியவர்களில் அனுராவும் ஒருவர்.பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியாக, அதிபர் ரணில் மேற்கொண்ட ஐ.எம்.எப்., உதவி திட்டத்தை அனுரா குறை கூறி வருகிறார். ஐ.எம்.எப்., கடும் நிபந்தனைகளை பேசி தளர்த்த வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு............


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

முருகன்
செப் 22, 2024 20:51

உலகில் மாற்றம் ஒன்றே நிலையானது இது அரசியலுக்கும் பெருந்தும்


ராமகிருஷ்ணன்
செப் 22, 2024 20:47

மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட், வெளங்கிடும். உலகில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி செத்துவிட்டது. லெனின் சிலையை கடலில் தூக்கி வீசி விட்டார்கள். இலங்கையில் தலை தூக்குவது அவ்வளவு சரியா படவில்லை இலங்கையும் பிச்சைகார நாடாக மாறி விடுமோ என்று தோன்றுகிறது. ஏற்கனவே பாக்கிஸ்தான் பிச்சைகார நாடாக இருக்கு. இந்தியாவிற்கு தான் ஓடி வருவார்கள். நமக்கு தலைவலி தான்.


vbs manian
செப் 22, 2024 20:11

ஏற்கனவே கால் பதித்துள்ள சீனாவுக்கு சக்கரைப்பொங்கல்.


Sivagiri
செப் 22, 2024 19:48

ஆனாலும் பரவாயில்லை , குடும்ப கொள்ளையர்களை விரட்டியாச்சு . . . அந்த வகையில் , தமிழ்நாட்டுக்கு ரோஷம் வந்து , ? . .


பல்லவி
செப் 22, 2024 19:29

காசேதான் ஆட்சியை தீர்மானிக்கும் இந்திய துறைமுக முதலீடுக்கு சங்கு முழங்குமா


ஆரூர் ரங்
செப் 22, 2024 16:29

ராவணன் ஆட்சி. மீண்டும்.


ஆரூர் ரங்
செப் 22, 2024 16:28

கம்யூனிஸ்டு ஆட்சி?. அப்போ ஜக வின் 27000 கோடி முதலீடு அம்போவா? கேக்கவே கஷ்டமா இருக்கு.


Rajah
செப் 22, 2024 14:31

நடைமுறையில் நாட்டின் வளர்ச்சிக்கு எது நல்லதோ அதைச் செய்வார். அது வலது சாரிக் கொள்கைகளாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வார்.


nalledran
செப் 22, 2024 13:47

மதவாதிகளால், பிற்போக்கு சிந்தனையாளர்களால் இந்த உலகை மாற்ற முடியாது. மார்க்சியமே மாற்று. கம்யூனிசமே மாற்று. தொழிலாளர்கள்-விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்கள் ஒற்றுமையே வெல்லும் என்பதை இலங்கை தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது.


Shekar
செப் 22, 2024 14:07

தம்பிக்கு ஏன் இலங்கை மேல் கோவம்,


Duruvesan
செப் 22, 2024 14:38

பெயரில்லாத நல்லவனே, அவரு ஜெயிச்சா திராவிட முதலீடுகு சங்கு ஊதப்படும்


ஆரூர் ரங்
செப் 22, 2024 14:39

உமக்கு கியூபா அல்லது வெனிசுலா பாஸ்போர்ட் கிடைக்கலையா? நேபாளம் படும்பாடு தெரியுமா ?


ஆரூர் ரங்
செப் 22, 2024 13:43

யாருக்கும் மெஜாரிட்டி வாக்குகள் கிடைக்காவிட்டால் மறு தேர்தல்தான். நம் நாட்டில் இரண்டே சீட் வைத்துக் கொண்டு முதல்வராவது போல அங்கே நடக்காது. மறு தேர்தலுக்கே வாய்ப்பதிகம் என சில ஊடகங்கள் கூறுகின்றன.


Subramaniyan Balachandran
செப் 22, 2024 18:13

கம்யூனிசம் என்பது செத்துப்போன பாம்பு . ஜனநாயகத்தில் பங்கேற்று தேர்தலில் போட்டியிடும் யாரும் தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டால், அவன் பெரிய பொய்யன் என்று பொருள் . கம்யூனிஸ்டுகளும், சோஷலிஸ்டுகளும் நாட்டை ஆண்டால் , அந்த நாடு கிரீஸ் , வெனிசுலா , க்யூபா , போல ஆகிவிடும் . கம்யூனிஸ்டுகள் பேரழிவு சக்திகள் .


முக்கிய வீடியோ