உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம்: மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் தொலைபேசியில் பேச்சு

பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம்: மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் தொலைபேசியில் பேச்சு

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து, பிரதமர் மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் பேசினார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் பேசினார். இந்திய மண்ணில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை வலுப்படுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wlu9ceio&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமர் மோடியிடம் கேட்டறிந்தார். குற்றவாளிகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும் நீதியின் முன் நிறுத்துவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் பிரதமர் இந்திய மண்ணில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தார். இந்திய மக்களும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் இஸ்ரேல் ஆதரவளிக்கும் என உறுதியளித்தார். எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலின் காட்டுமிராண்டித்தனமான தன்மையை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Karthik
ஏப் 25, 2025 10:02

இந்த சூழ்நிலையிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து போடுகின்ற துரோகிகள் நயவஞ்சகர்கள் இன்றைக்குள் நாட்டை விட்டு ஓடி விடவும்.


अप्पावी
ஏப் 25, 2025 08:26

யார் யாரோட பேசுறதுன்னே வெவஸ்தையே கிடையாது.


thehindu
ஏப் 24, 2025 22:35

லச்சக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்தவர்களுடன் என்ன உல்லாசம் வேண்டிக்கிடக்கிறது ?


N Sasikumar Yadhav
ஏப் 25, 2025 00:55

இசுலாமிய ஹமாஸ் பயங்கரவாத கும்பலுங்க உங்களுக்கு அப்பாவியாக தெரிகிறதென்றால் உங்க ஜீனை சோதனை செய்ய வேண்டும்


RAMAKRISHNAN NATESAN
ஏப் 24, 2025 21:47

மார்க்கத்து மூர்க்கவன்றிகளை ஏனையோர் வேட்டையாடணும் ....


kr
ஏப் 24, 2025 21:39

Innocent tourists were butchered helplessly. Even in war, civilians are rarely attacked. Very unfortunate that we have some people who cannot understand our language, we have to speak in their own language now and let them know how painful it is


sankaranarayanan
ஏப் 24, 2025 21:15

பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் பேசினார். பேசியதோடு நிற்காமல் ஹமாஸை அங்கே அடியோடு ஒழித்தாற்போல இங்கேயும் காஷ்மீரிலும் பயங்கரவாதத்தை ஒழிக்க இஸ்ரேலுடன் கூட்டு ராணுவ பயிர்ச்சி நடந்தால் தீவிரவாதிகள் இனி தலையே தூக்க முடியாது முடியாது அடியோடு அழிக்கப்பட்டுவிடும்


தாமரை மலர்கிறது
ஏப் 24, 2025 21:08

இந்தியாவின் சிறந்த நண்பன் இஸ்ரேல்.


Ramesh Sargam
ஏப் 24, 2025 20:51

பயங்கரவாதத்தை ஒழிக்க அமைதி விரும்பும் நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு ஒரு சரியான பாடம் கற்பிக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை