உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தென்கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் திடீர் பிரகடனம்: காரணம் என்ன ?

தென்கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் திடீர் பிரகடனம்: காரணம் என்ன ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சியோல்: வட கொரிய கம்யூ. படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் இன்று (டிச.,04) அவசரகால ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வட கொரியா - தென் கொரியா இடையே முன் எப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகளுக்கு இடை யேயான உறவு பாதிக்கப்பட்டு பகை நாடுகளாக உள்ளன. வட கொரியா மீது தென் கொரியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டேன் என வடகொரியா அதிபர் கிம் ஜான் உங் எச்சரித்திருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3092jnwj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் தென் கொரியா அதிபர் யூன்சுக் யேல் இன்று (டிச.,04) டி.வி. வாயிலாக நாட்டு மக்களுக்கு திடீரென அவசரகால நிலையை பிரகடனபடுத்தினார். இது குறித்து அவர் கூறியதாவது: வட கொரியாவின் கம்யூ. படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென்கொரியாவை பாதுகாக்கவும் உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கவும், அவசர கால ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்துகிறேன். இப்பிரகடனத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது சரியல்ல. சுதந்திரம் , அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றை பாதுகாக்க தக்க நடவடிக்கையை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை . இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக அதிபரின் அறிவிப்பில் தேச விரோத சக்திகள் என தங்களை அழைத்ததாக எதிர்க்கட்சிகள் அதிபர் யூன்சுக் யேலுக்கு கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே புதிய ராணுவ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து பார்லி., வளாகத்தில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனையடு்த்து போலீசார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே தள்ளமுள்ளு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
டிச 03, 2024 22:31

இதே மாதிரி தமிழகத்திலும் ராணுவச்சட்டத்தை பிரகடனம் செய்வது நல்லது.


amuthan
டிச 04, 2024 09:33

மிகவும் சரியான கருத்து. தமிழகத்தை பற்றி தவறாக பேசுபவர்களை உள்ளே தள்ளனும்


Unmai Vilambi
டிச 03, 2024 21:47

கேன்டீன்ல போண்டா திங்காம்பங்க .


Barakat Ali
டிச 03, 2024 21:08

உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கவும், அவசர கால ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்துகிறேன். இந்தியாவுலயும் எமர்ஜென்சிக்கு தேவை இருக்கோ ????


Barakat Ali
டிச 03, 2024 21:07

அதிபரின் அறிவிப்பில் தேச விரோத சக்திகள் என தங்களை அழைத்ததாக எதிர்க்கட்சிகள் அதிபர் யூன்சுக் யேலுக்கு கண்டனம் தெரிவித்தன ......... எங்க நாட்டுல தேச விரோதிகள் கண்டனத்தோட நிறுத்திக்க மாட்டாங்க ..... அவையில் அமளி பண்ணி முடக்குவாங்க ....


Ramesh Sargam
டிச 03, 2024 21:06

ஏற்கனவே ஆரம்பித்த போர் உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் வேறு இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம். ஏன் இந்த போர் வெறி? காட்டில் உள்ள மிருகங்கள் கூட பசிக்காக ஒன்றை ஒன்று அடித்து வாழ்கின்றன. பசி ஆறியபின் சிறிது ஓய்வு எடுக்கின்றன. ஆனால் இந்த மனித மிருகங்கள் ஓய்வே எடுப்பதில்லையே... ஒரு பக்கம் இயற்கை அச்சுறுத்தல். மறுபக்கம் போர் அச்சுறுத்தல். மனிதன் பிறந்தது முதல், இறக்கும் வரை அச்சுறுத்தலில்தான் வாழவேண்டும் என்று விதியா?


Kundalakesi
டிச 03, 2024 21:14

பெரியண்ணன் டாலர் அடித்து பல நாடுகளுக்கு வாரி வழங்கி, பெரியண்ணன் நாட்டில் உள்ள ஆயுத தயாரிப்புகளை மட்டும் அவங்க செய்யும் நடைமுறை தான் இந்த சிண்டு முண்டு வேலை. ஆப்கான், பாக்கிஸ்தான், இந்தியா, இஸ்ரேல், கொரியா போன்ற நாடுகளுக்கு ஆயுத சப்ளை பண்ணும் பெரியண்ணனின் கொட்டத்தை அடக்க வேண்டும். டாலர் வர்த்தகத்திற்கு மாற்று வழிகளை ஆராய்ந்து செயல் படுத்தவேண்டும்


சமீபத்திய செய்தி