உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  பாக்.,கில் தற்கொலை படை தாக்குதல் ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் பலி

 பாக்.,கில் தற்கொலை படை தாக்குதல் ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ தலைமையகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், ஆறு பேர் கொல்லப்பட்டனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையொட்டிய கைபர் பக்துங்க்வா மாகாணத்தில், பயங்கரவாத நடவடிக் கைகள் அதிகரித்திருப்பதாக அந்நாட்டு அரசு கூறி வருகிறது. பாகிஸ்தானின் தலிபான் என அழைக்கப்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாதிகள், அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதாக ராணுவம் குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், கைபர் பக்துங்க்வா மாகாண தலைநகர் பெஷாவரில் உள்ள ராணுவ தலைமையகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று காலை தற்கொலை படைத் தாக்குதலை நடத்தினர். பிரதான நுழைவு வாயில் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் என அடுத்தடுத்து இரு இடங்களில் குண்டுகளை வெடிக்க வைத்து தாக்கினர். இதில் மூ ன்று கமாண்டோக்கள் உயிரிழந்தனர். அதேவேளையில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள், ராணுவ தலைமையகத்தின் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். தற்கொலை படைத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாக்., அரசு பயங்கரவாதத்தை ஒழிக்கப் போவதாக எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்