உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனுக்கு ஆதரவு; ஆயுதங்கள் அதிகமாக கொடுப்போம்; ரஷ்யாவுக்கு அமெரிக்கா அதிபர் பைடன் எச்சரிக்கை

உக்ரைனுக்கு ஆதரவு; ஆயுதங்கள் அதிகமாக கொடுப்போம்; ரஷ்யாவுக்கு அமெரிக்கா அதிபர் பைடன் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். 'உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம். ஆயுதங்கள் அதிகமாக கொடுப்போம்' என பைடன் உறுதி அளித்துள்ளார்.உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், அந்நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் 'ட்ரோன்'கள் வாயிலாக ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு, ரஷ்யாவிற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலை கண்டிக்கிறேன். குளிர்காலத்தில் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில், மின்சாரம் துண்டித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான் தெளிவாக சொல்கிறேன். உக்ரைன் மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ விரும்புகிறார்கள். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைன் வெற்றி பெறும் வரை அமெரிக்காவும், சர்வதேச சமூகமும் உக்ரைனுடன் தொடர்ந்து நிற்க வேண்டும். உக்ரைனுக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்குமாறு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். ரஷ்யாவின் படைகளுக்கு எதிராக, உக்ரைன் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

சுலைமான்
டிச 27, 2024 09:26

முதல்ல வீட்ட காலி பண்ணு.... அப்பறமா இட்லி குடுப்பியோ ! முறுக்கு குடுப்பியோ!


sankaranarayanan
டிச 26, 2024 18:25

பதவியைவிட்டு விலகி ஒய்வு எடுக்கும் இந்த தாத்தா எதற்காக இன்னும் இந்த வெட்டி வீராப்புடன் பேசவேண்டும் அமைதியாக ஆண்டோமா போனோமா துன்று இல்லாமல் சாகும் வயதில் சங்கரா சங்கரா என்று கூறிக்கொண்டு வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது.


SUBRAMANIAN P
டிச 26, 2024 17:36

அதான் பீஸை பிடுங்கிட்டாங்கல்ல.. பென்ஷன் வாங்கிட்டு பேசாம இருயா. சும்மா சவுண்டு குடுத்துக்குட்டு. எல்லாம் தம்பி ட்ரம்ப்பு பாத்துப்பான். அவன் வந்து என்ன எய்யப்போறானோ.. தொண்ணூறு வயசு வரைக்கும் சேரை பிடிச்சிக்கிட்டு விடாம இல்லாத அட்டூழியங்க எல்லாத்தையும் பண்றானுங்க.. மனுஷபயலுக நிம்மதியா வாழ முடியுதா..


Rpalni
டிச 26, 2024 11:37

நீ இப்ப வாலில்லா நரி, பல்லில்லா பாம்பு. கேம் ஓவர்


கண்ணன்
டிச 26, 2024 11:14

அமெரிக்க மக்கள் இனி ஒரு சபதம் எடுக்க வேண்டும்- இன்னும் இருபதாண்டுகளுக்குக் குறையாமல் டெமாக்ரடிக் கட்சியை எதிர்த்து வாக்களித்தால் மட்டுமே அவர்கள் நாடும் உலகமும் உருப்படும்


M Ramachandran
டிச 26, 2024 10:50

உன் பதவி பறி போயிடுச்சி இனி மூடிக்கிட்டு அடக்கி உட்கார்.


M Ramachandran
டிச 26, 2024 10:43

பத்திரம்


M Ramachandran
டிச 26, 2024 10:42

நீ ஒரு செத்த பாம்பு. ட்ரம்பிற்கு குடைச்சல் கொடுக்க நீ பிதற்றி கொண்டே இருப்பாய் இனி அமெரிக்கா ஜனாதி பதி கனவு தகர்க்க பட்டு வீட்டது. ஜாக்கிரத்த


N.Purushothaman
டிச 26, 2024 09:14

இந்த போரை முன்னரே முடிவிற்கு கொண்டு வந்துவிட்டால் அந்த பெயர் எங்கே இந்திய பிரதமருக்கு சென்றிடுமோ என்கிற பொறாமையும், உக்ரைனை அழித்தே தீருவோம் என்கிற இறுமாப்புடன் பைடன் அரசாங்கம் சென்று கொண்டு இருக்கிறது .. இது தான் புவி சார் அரசியல். வரலாற்றில் இது வரை அமெரிக்காவும் ரஷ்யாவும் நேருக்கு நேர் போரில் ஈடுபட்டதே இல்லை. இது தெரியாமல் சிறிய நாடுகள் அவர்களின் கைப்பாவையாக மாறி அழிவை சந்தித்து கொண்டு இருக்கின்றன .. உக்ரைன் தற்போது அதி நவீன ஆயுதங்களை சோதிக்கும் போர்க்களமாக மாறி உள்ளது வேதனை தரும் விஷயம் ... அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் இந்த குளிர்காலத்தில் மின்சாரம் இல்லாமல் திண்டாடி கொண்டு இருக்கின்றனர் ....அமெரிக்காவோ இந்த போரை நிறுத்தவிடாமல் சதி செய்து கொண்டு இருக்கிறது ...


RAJ
டிச 26, 2024 08:53

Biden தாத்தா உக்ரினுக்கு சங்கு ஊதி பால் ஊத்த ரொம்ப ஆர்வம இருக்காரு.. அங்க ஒரு கோமாளி மாவீரன்னு நினைச்சுகிட்டு மக்களை வதைக்கிறான்.. ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை