உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐ.எஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டால் சிரியாவுக்கு பொன்னான எதிர்காலம்; அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

ஐ.எஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டால் சிரியாவுக்கு பொன்னான எதிர்காலம்; அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டால், சிரியாவுக்கு ஒரு பொன்னான எதிர்காலம் உண்டு என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக கூறியிருந்தார். அதன்படி, சிரியாவில், 'ஆப்பரேஷன் ஹாக்கி' என்ற பெயரில் அமெரிக்கா தாக்குலை தொடங்கி உள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிரியாவில் துணிச்சலான அமெரிக்க ராணுவ வீரர்களை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொன்றனர். அதன் காரணமாக, நான் உறுதியளித்தபடியே, இந்தக் கொடூரமான பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா மிகக் கடுமையான பதிலடி தாக்குதலை நடத்துகிறது என்பதை அறிவிக்கிறேன். சிரியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் கோட்டைகள் மீது நாங்கள் மிகத் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறோம். ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டால், அந்த நாட்டிற்கு ஒரு பொன்னான எதிர்காலம் உண்டு. சிரியாவிற்கு மீண்டும் பெருமையை மீட்டெடுக்க கடுமையாக உழைக்கும் ஒருவரால் வழிநடத்தப்படும் சிரிய அரசு இதற்கு முழு ஆதரவு அளிக்கிறது. அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குத் தீய எண்ணம் கொண்ட அனைத்து பயங்கரவாதிகளுக்கும் இதன்மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. நீங்கள் எந்த வகையிலாவது அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினாலோ அல்லது அச்சுறுத்தினாலோ, இதற்கு முன்பு நீங்கள் சந்தித்ததை விட மிகக் கடுமையான தாக்குதலைச் சந்திப்பீர்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ராணுவ நடவடிக்கை

அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் கூறியதாவது: சிரியாவில் இஸ்லாமிய அரசு குழுவிற்கு எதிராக அமெரிக்கப் படைகள் ராணுவ நடவடிக்கையை தொடங்கி உள்ளது.கொடூரமான தாக்குதலுக்கு பிறகு நாங்கள் நேரடியாக சொன்னது போல, நீங்கள் அமெரிக்கர்களை உலகில் எங்கும் குறிவைத்தால், அமெரிக்கா உங்களை வேட்டையாடும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Skywalker
டிச 20, 2025 14:41

ISIS IS EVERYWHERE IN WORLD, WE MUST DESTROY IT


Ramesh Sargam
டிச 20, 2025 12:27

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டால், ஒட்டுமொத்த உலகத்துக்கே பொன்னான எதிர்காலம், அமெரிக்காவையும் சேர்த்து.


கண்ணன்
டிச 20, 2025 11:36

அப்போ நோபல் பரிசு கனவான கானல் நீர் தானா!


Anand
டிச 20, 2025 10:39

தற்போது சிரியாவை ஆண்டுகொண்டிருப்பவன் ஐ.எஸ் பயங்கரவாதி தானே? முதலில் உன்னை அழித்தால் தான் உலகத்திற்கு பொன்னான எதிர்காலம்.


ஜெகதீசன்
டிச 20, 2025 09:39

சிரியாவுக்கு மட்டுமா.... அதை ஒழித்தால் உலகத்துக்கே நல்லது.


Barakat Ali
டிச 20, 2025 09:24

பாகிஸ்தானை பக்கத்துல வெச்சுக்கிட்டு ஐ எஸ் ஐ எஸ் ஐ ஒழிப்பீங்க ????


தமிழ்வேள்
டிச 20, 2025 09:07

பயங்கரவாதத்தின் மூல பலம்/ வேர்மூலம், அந்த ஒற்றை புத்தகமும் அதன் காலத்துக்கு ஒவ்வாத விரிவுரைகள், அதன்மீதான கண்மூடித்தனமான நம்பிக்கைகள் மட்டுமே..சீனாவைப்போல தாஜிகிஸ்தானைப் போல அந்த புத்தகத்தை அந்தந்த நாடுகளின் மொழிகளில் மொழிபெயர்த்து, வேண்டாதவற்றை நீக்கி, அந்தந்த நாடுகளின் மொழிகளில் அனுஷ்டானம்/ ஓதுவதை கட்டாயமாக்கி கண்ட்ரோலில் வைத்தால் மட்டுமே பயங்கரவாதம் கட்டுக்குள் வரும்....


ராமகிருஷ்ணன்
டிச 20, 2025 08:22

பாம்பின் குணத்தை மாற்ற முடியாது. அமெரிக்க விடியலார் டிரம்பர் விரைவில் உணருவார்.


சந்திரசேகர்
டிச 20, 2025 08:08

அமெரிக்ககாரனை யாராவது கொன்றால் அது எந்த நாடாக இருந்தாலும் உள்ளே புகுந்து அமெரிக்கா கொல்லும். ஆனால் மற்ற நாட்டு ஆளுகள் என்றால் அது அந்த நாட்டின் இறையாண்மை பாதிக்கும் என்று அமெரிக்கா சொல்லும். இவர்களே பயங்கரவாதிகளை வளர்ந்தும் விடுவார்கள் தேவைபட்டால் அழிக்கவும் செய்வார்கள். பாகிஸ்தான் மாதிரி நாட்டை நண்பராக வைத்து கொண்டு இரட்டை வேஷம் போடும் அமெரிக்கா


தியாகு
டிச 20, 2025 07:30

கட்டுமர திருட்டு காரன் ஊழல் செய்யமாட்டான் என்று நம்புவதும் மூர்க்கன் திருந்தி குண்டு வைக்கமாட்டான் என்று நம்புவதும் ஒன்று.


தமிழன்
டிச 20, 2025 13:11

சொம்பு ரொம்ப அடி வாங்கிருக்கு போல .


முக்கிய வீடியோ