உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார் சிரியா அதிபர் ஆசாத்; அரண்மனையை கைப்பற்றினர் கிளர்ச்சியாளர்கள்!

ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார் சிரியா அதிபர் ஆசாத்; அரண்மனையை கைப்பற்றினர் கிளர்ச்சியாளர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: 'கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள, தப்பியோடிய சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆசாத் குடும்பத்தின் அரண்மனையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.மேற்காசிய நாடான சிரியாவில், 2000ம் ஆண்டில் இருந்து அதிபராக இருந்தவர் பஷார் அல் ஆசாத். அதற்கு முன், 30 ஆண்டுகளாக அவருடைய தந்தை ஹபீஸ் அல் ஆசாத் அதிபராக இருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து பதவியேற்ற ஆசாத், தந்தை வழியில் எதிர்ப்பாளர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கினார். கடந்த, 2011ல் அரசுக்கு எதிராக துவங்கிய போராட்டம், உள்நாட்டு போராக வெடித்தது. அரசுக்கு எதிராக பல அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகள் இணைந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wjx2gdjg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் ஒரு பகுதியான, எச்.டி.எஸ்., எனப்படும் ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம் என்ற அமைப்பு தலைமையிலான அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகள், கடந்த மாதம், 27ம் தேதி தீவிர தாக்குதலை துவங்கின. அலெப்போ நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் சுற்றி வளைத்தன. இதைத் தொடர்ந்து, டாரா, குனேத்ரா, சுவேடா ஆகிய நகரங்களையும் கைப்பற்றின. எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை, கிளர்ச்சி படைகள் நேற்று கைப்பற்றின. தலைநகரை கிளர்ச்சிப்படைகள் நெருங்கியதை அறிந்த அதிபர் ஆசாத், விமானம் வாயிலாக தப்பிச் சென்றார்.

தஞ்சம் எங்கே?

இதையடுத்து, நாட்டின் நிர்வாகம் தங்களுடைய கட்டுப்பாட்டுகள் வந்துள்ளதாக கிளர்ச்சிப் படைகள் தெரிவித்தன. ஆனால் ஆசாத் எந்த நாட்டுக்குச் சென்றார் என்ற தகவல் வெளியாகாமல் மர்மமாக இருந்தது. தற்போது, அதற்கு விடை கிடைத்துள்ளது. ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து தப்பியோடிய ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யா, மாஸ்கோவில் தஞ்சம் புகுந்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரண்மனை

இதற்கிடையே, ஆசாத் ரஷ்யாவிற்கு தப்பிச் சென்றதால், சிரியா கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ் அரண்மனைகளைக் கைப்பற்றினர். 50 ஆண்டுகாலமாக தந்தை, மகன் என ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர். ஆசாத் குடும்பத்தின் அரண்மனைக்குள் கிளர்ச்சியாளர்கள் உள்ளே நுழைந்தனர். ஆசாத் மற்றும் அவரது தந்தை புகைப்படத்தை அகற்றினர். அரண்மனையில் கிளர்ச்சியாளர்கள் உலா வரும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

user name
டிச 09, 2024 12:14

மத்தியிலும் இது ஒன்று ஆட்சி மாற்றம் என்று வாசகர்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது , ஒரே நாடு , ஒரே கட்சி ,ஒரே தேர்தல் , என்று இருந்தால் ஒரே ஓட்டம் தான்


ராமகிருஷ்ணன்
டிச 09, 2024 10:01

கோபாலபுர கோமான்களின் கொட்டம் அடக்க மக்கள் கொதித்து வருகிறார்கள்


N.Purushothaman
டிச 09, 2024 09:40

சிரியாவில் ஒரு கட்சி ஆட்சி முறை என்பது தான் அந்த நாட்டின் சட்டம் ...அதனாலேயே ஒரே கட்சியை சேர்ந்த அசாத் அவர்களின் தந்தையும் அதன் பிறகு அவரின் மகனும் பொறுப்பை ஏற்றனர் ... அசாத் தந்தை ஆட்சியில் இருக்கும் வரை சிரியா மக்கள் ஓரளவு நனறாக வசதியாகவும் நல்ல நாடாகவும் இருந்தது... அவரும் இந்தியாவுடன் சிறந்த நட்புறவை கொண்டு இருந்தார். ஆசாத்தின் மகன் மருத்துவர் ....கண் தொடர்பான படிப்பில் பட்டம் பெற்றவர் ....அவரின் ஆட்சியில் தான் ஐ எஸ் ஐ எஸ் என்னும் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத இயக்கம் உருவெடுத்து பல லட்ச அப்பாவி சிறிய மக்களை கொண்டு குவித்தனர் ... அந்த பயங்கரவாத அமைப்பை தூபம் போட்டு வளர்த்தது துருக்கியும் அமெரிக்காவும் ....


MUTHU
டிச 09, 2024 13:14

ஐ எஸ் ஐ எஸ் லெபனான் நாட்டிலும் எல்லையோர கிறிஸ்தவ கிராமங்களில் தனது கொடூரத்தை காட்டியது. hezbollah அமைப்பு உருவான பின்பு தான் அவர்களின் கொட்டம் அடக்கப்பட்டது.


MUTHU
டிச 09, 2024 13:19

இதிலே இஸ்ரேலுக்கு ஒரு தற்காலிக நிம்மதி. ஈரானிலிருந்து ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் மற்றும் கடத்தல் பொருட்களை சிரியா சுரங்கங்கள் மூலமாகவே hezbolla கொண்டு வந்தது. அது தடைபட வாய்ப்புள்ளது. அதனால் ஹெஸ்பொல்லாஹ் அதனுடைய அழிவை நோக்கி செல்லும் என்று தோன்றுகின்றது.


sankar
டிச 09, 2024 09:11

மூர்க்கர்கள் முடிவு இப்படித்தான் இருக்கும்


jss
டிச 09, 2024 08:44

something like this may happen in our states where such one family rule is in vogue


hariharan
டிச 09, 2024 09:17

இதுபோல இங்கேயும் 2026க்கு பிறகு எதிர்பார்க்கலாம்.


புதிய வீடியோ