உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டி-20 உலக கோப்பை: இந்தியாவுக்கு அரையிறுதி உறுதியா...

டி-20 உலக கோப்பை: இந்தியாவுக்கு அரையிறுதி உறுதியா...

செயின்ட்லுாசியா: செயின்ட்லுாசியாவில் இன்று(ஜூன் 24) நடக்கும் 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் (பிரிவு-1) இந்தியா, ஆஸ்திரேலியா மோதுகின்றன.இந்திய அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ரிஷாப், சூர்யகுமார், துபே, ஹர்திக் பாண்ட்யா அசத்துகின்றனர். பவுலிங்கில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மிரட்டுகின்றனர்.ஆஸ்திரேலிய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. இன்று ஸ்டார்க் அணிக்கு திரும்பலாம். பேட்டிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டும்.அரையிறுதிக்கு முன்னேற 'பிரிவு-1' ல் கடும் போட்டி நிலவுகிறது.* இன்று ஆஸ்திரேலியாவை வென்றால், இந்தியா (6 புள்ளி) அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.* ஒருவேளை இன்று தோற்றால், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 4 புள்ளி பெறும். அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் (ஜூலை 25) மோதும் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.* இதில் ஆப்கானிஸ்தான் வென்றால், இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் தலா 4 புள்ளி பெறும். 'ரன்-ரேட்' அடிப்படையில் இரு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.* மாறாக வங்கதேசம் வென்றால், ஆப்கன் வெளியேறும். இந்தியா, ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும்.* ஆஸ்திரேலியா தோற்று, ஆப்கானிஸ்தான் வென்றால், இந்தியா, ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

kalyan
ஜூன் 24, 2024 13:10

ஒருநாள் போட்டியில் முதல் நிலைப்போட்டிகளில் League matches ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு பழி வாங்கி விட்டது ஆப்கானிஸ்தான். இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு பழி வாங்குமா இந்திய அணி? வாங்கும் என்று எண்ணுகிறேன். இந்து ஆட்ரேலிய தோற்றால் ரன் Rate ல் கூட ஆப்கானிஸ்தான் முன்னேற வாய்ப்புண்டு


Sathish Sunraise
ஜூன் 24, 2024 12:55

சரி ஒரு வேலை ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தால் பங்களாதேஷுக்கு வாய்ப்பு இருக்குமா இல்லையா அதை சொல்லவில்லை .


Anbuselvan
ஜூன் 24, 2024 12:28

இந்திய அணி அரையிறுதி ஆட்டத்திற்கு செல்வது கிட்டத்தட்ட 99% உறுதி. இப்போதைய NRR எனப்படும் நிகர ரன் ரேட், இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது. அதாவது இந்தியாவின் நிகர ரன் ரேட் 2,425, அதுவே ஆஸ்திரேலியாவின் நிகர ரன் ரேட் 0.223. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை வென்றால் கூட மிக அதிக நிகர ரன் ரேட் இல் வெற்றி பெற வேண்டும். அதாவது தோராயமாக நூறு ரன் வித்யாசத்திலோ அல்லது ஆறு அல்லது ஏழு ஓவர்களில் ஆடி வெற்றி பெற வேண்டி இருக்கும். மிகவும் கடினம். இன்னொரு பக்கத்தில் ஆப்கானிஸ்தானுக்கு இதை விட கடினமான டார்கெட். ஆக மொத்தத்தில் அரை இறுதியில் இங்கிலாந்து அணியை சந்திக்க இந்திய அணி தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும்.


கத்தரிக்காய் வியாபாரி
ஜூன் 24, 2024 12:27

ஒண்ணுத்துக்கும் உதவாத ரோஹிதையும் கோலியையும் நீக்கிட்டா அணி சூப்பர்


மேலும் செய்திகள்