மேலும் செய்திகள்
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டாவுக்கு துன்புறுத்தலா? இஸ்ரேல் மறுப்பு
9 hour(s) ago | 1
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பிரிட்டன் அரசு தீவிரம்
9 hour(s) ago
பாக்.,கிற்கு போர் விமான இன்ஜினா? ரஷ்யா மறுப்பு!
11 hour(s) ago | 7
கயானா: 'டி-20' உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளதுஇந்தியாவெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன, இதில் ஆப்கானிஸ்தான், ;தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து இந்தியா உள்ளிட்ட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.இன்று காலை நடந்த முதல் அரையிறுதியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென்ஆப்ரிக்கா பைனலுக்கு தகுதி பெற்றது.இந்நிலையில் இன்று கயானாவில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்தியா 8 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின் மீண்டும் துவங்கியது. அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சூர்யகுமார் 47 ரன்களி்ல் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 23 ரன்கள் எடுத்தார்.20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
9 hour(s) ago | 1
9 hour(s) ago
11 hour(s) ago | 7