உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கடல் எல்லையில் 10 சீன போர் விமானங்கள், 6 கப்பல்கள் நடமாட்டம்: உஷாரான தைவான்

கடல் எல்லையில் 10 சீன போர் விமானங்கள், 6 கப்பல்கள் நடமாட்டம்: உஷாரான தைவான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தைபே; தைவான் கடல் எல்லையில் சீனாவின் ராணுவ விமானங்களும், கடற்படை கப்பல்களும் இயங்குவதை தைவான் கண்டறிந்துள்ளது.தங்கள் நாட்டு எல்லையில் சீன விமானங்கள், கப்பல்கள் நடமாட்டம் இருப்பதை தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது. இதுகுறித்து, தமது சமூக வலை தள பக்கத்தில் ஒரு பதிவையும் வெளியிட்டு உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது: தைவானை சுற்றி 10 ராணுவ விமானங்கள், 6 போர்க்கப்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன. விமானங்களில் 2 விமானங்கள் இடைநிலைக் கோட்டை கடந்து நுழைந்துள்ளன. நாங்கள் நிலைமையை கண்காணித்து சூழலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தைவான் மீது சீனா தமது ஆதிக்கத்தை செலுத்த தீவிரமாக செயலாற்றி வருவதால், தங்கள் நாட்டுக்கு ஆதரவாக நிற்க இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தினார் என்று தைவான் நாட்டு செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தத்வமசி
ஆக 19, 2025 16:15

டிரம்புக்கு அடுத்த வேலை வந்து விட்டது. எல்லாம் விளையாட்டு பொம்மையாக இருக்கப் போகிறது. நன்றாக கவனியுங்கள்.


Kumar Kumzi
ஆக 19, 2025 13:59

டிரம்ப் இனி சீனாவிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டி இருக்மே


நிக்கோல்தாம்சன்
ஆக 19, 2025 13:09

வெள்ளைக்கார நாடுகள் இன்னமும் நாடுகளை துண்டாடுவதை நிறுத்தவே போவதில்லையா, இப்போ அந்த லிஸ்டில் சீனாவும்


Ramesh Sargam
ஆக 19, 2025 11:51

மீண்டும் ஒரு போர் மூள்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இப்பவே அமைதி விரும்பி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த போர் மூளாமல் தடுக்கவேண்டும்.


சண்டக்கோழி
ஆக 19, 2025 11:45

இது போருக்காப நேரமில்லை ஹைன்..


N Sasikumar Yadhav
ஆக 20, 2025 06:36

இந்த வசனத்தை உங்க திராவிட மாடல் எஜமானிடம் சொல்லுங்க இங்க விஞ்ஞானரீதியான ஊழலுக்கு இடமில்லை என சொல்லுங்க


sankaranarayanan
ஆக 19, 2025 10:41

மேற்கில் ரஷ்யா தனது ஆதிக்கத்தை உக்ரைனிடம் காட்டி வருகிறது சீனா கிழக்கில் தனது ஆதிக்கத்தை தைவானிடம் காட்டி வருகிறது எங்கே அந்த நோபல் பரிசுக்காக அலையும் அதிபர் அவரை கூப்பிடுங்கள் தீர்த்து வைப்பர் எப்படி என்றால் தைவான் சீனாவிற்கே சொந்தம் என்று கூறிவிட்டு பார் நான் எப்படி சமாதானத்தை அடைய காரணமாகிவிட்டேன் என்று கூறி இரு நாடுகளும் தனது பெயரை அமைதி நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யம்படி தூண்டி விடுவார் என்னே அறிவு இந்த மனிதருக்கு


SUBBU,MADURAI
ஆக 19, 2025 09:28

சீனாவிற்கு பொழுது போகவில்லையென்றால் இந்த மாதிரி சில்மிஷ விளையாட்டுகளில் இறங்கி விடுவான்கள்.