உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிணையக் கைதிகளை விடுவித்தால் காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை

பிணையக் கைதிகளை விடுவித்தால் காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: மீதமுள்ள பிணைக் கைதிகளைவிடுவித்து, இஸ்ரேலின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை துவக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 07-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். 251 க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை துவக்கியது. இதில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது வரை 75 சதவீத காசா பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பட்டில் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல் தெரிவித்து, இஸ்ரேலின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டால், காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை துவக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

jss
ஆக 22, 2025 09:50

அக்கிரமம் செய்பவன் அழிந்தே போவான். ஹமாஸ் செய்த மனிதாபிமானமற்ற செயல்களால் பாலஸதீனர்கள இன்றளவும் கஷட்டப்பட்டு வருகிறாரகள். ஒரு வாய் சோற்றுக்கே ததிங்கணத்தோம் போடுகுறார்கள். இந்த நிலையை உணர்ந்து ஹமாஸ் இருக்கிற பிணைக்கைதிகளை விடுவிக்கவேண்டும். ஏராளமான பாலஸத்தீனர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். இந்த சண்டையினால் ஹமாஸுக்கும் பாலஸத்தீனியர்களிக்குமே கஷட்டம். அதை நினைவில் கொள்ள வேண்டும் . தீவிரவாதம் வென்றதாக சரித்திரமே இல்லை.


RK
ஆக 22, 2025 07:57

தீவிரவாதிகள் பிணையக்கைதிகளை விடுவித்து அப்பாவி பாலஸ்தீனியர்களை கொல்வதை தடுக்கலாம். ஆனால் அவர்களுக்கு அமைதி புடிக்காது போல....


Baba Bhagwaan
ஆக 22, 2025 06:42

ennaikum nampakoodathu


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை