உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்; இஸ்ரேல் தாக்குதலில் 9 பேர் பலி

போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்; இஸ்ரேல் தாக்குதலில் 9 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் காசாவில் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இஸ்ரேல் - காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u9w6ojts&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது, போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்த விதிகளை மீறியதாக கூறி, தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார். அதன்படி காசாவில் பல்வேறு இடங்களில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் அக்டோபர் 2023ல் தொடங்கியதில் இருந்து காசாவில் 68,527 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். பின்னர் அதிபர் டிரம்ப் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது மீண்டும் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்க தொடங்கி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Balamurugan
அக் 29, 2025 17:57

தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு இந்த போரை நிறுத்தவேண்டும்.


Balamurugan
அக் 29, 2025 17:56

அப்போ டிரம்புக்கு கடைசி வரை நோபல் பரிசு கிடைக்காதா.


Rathna
அக் 29, 2025 11:10

2014க்கு முன் இந்தியாவின் பல இடங்களில் குண்டு வெடித்தது. ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர். நமது அரசாங்கம் பழைய கடுதாசி பாகிஸ்தானுக்கு எழுதி சும்மா இருந்தது. ஆனால் இஸ்ரேலியர்கள் பழைய கால யூதர்கள் இல்லை. 6 அடிக்கும் மேல் வளர்ந்த அமெரிக்கர்கள், ஜெர்மானியர்கள், போலந்து, ஐரோப்பிய, ருசியா நாட்டு யூதர்கள். அடிக்கு அடி, ரத்தத்திற்கு ரத்தம் என்று போராடும் வீரர்கள். அவர்களிடம் ஹமாஸ் வால் ஆட்டினால், நவீன ஆயுதங்கள் மூலம் தேவையான பரிசு கிடைக்கும்.


RK
அக் 29, 2025 10:10

தீவிரவாதிகளை அடியோடு ஒழிக்கும் வரை இஸ்ரேல் ஓயாது. வாழ்த்துக்கள்.


ராமானுஜன்
அக் 29, 2025 09:14

ஒப்பந்தம் மீறியது ஹமஸ்


nisar ahmad
அக் 29, 2025 09:58

எப்படியென்று விளக்கம் தர வேண்டும்


ASIATIC RAMESH
அக் 29, 2025 09:08

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இஸ்ரேல் - காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது.. அப்ப ... இந்த கையெழுத்து நோபலுக்காகவா.. என்னங்கடா இது... அரசியல் விளையாட்டு.... முதல்ல ஐ நா சபையை கலைத்துவிட்டு காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமையுங்கள்... இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் சட்டங்களும் காலத்திற்கு ஏற்றபடி மாற்றப்படவேண்டியவைதான் ....


Indian
அக் 29, 2025 09:05

இஸ்ரேலுக்கு சகிப்பு தன்மை இல்லை . இப்படியே போனா சிக்கல் தான்


raja
அக் 29, 2025 08:21

இஸ்ரேலுக்கு வேற வேலை கிடையாது


RAJ
அக் 29, 2025 08:18

பெரியண்ணா....நாந்தேன்...நாந்தேன்......எல்லாமே நாந்தேன்.....எனக்கு நோபல் .... எனக்கு நோபல்..... கடைசில எல்லாமே வீண்..ன் ...ஹஹஹஹ