உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா - பாகிஸ்தான் உறவில் பதற்றம்: சவுதி அரேபியா கவலை

இந்தியா - பாகிஸ்தான் உறவில் பதற்றம்: சவுதி அரேபியா கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் ஏற்பட்ட பதற்றத்திற்கு சவுதி அரேபியா கவலை தெரிவித்து உள்ளது.காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் உறவில் பதற்றம் நிலவுகிறது. மேலும், எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.இந்நிலையில் இதற்கு கவலை தெரிவித்து சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றம் மற்றும் எல்லையில் இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் துப்பாக்கிச்சூடு ஆகியன கவலையை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளும் பதற்றத்தை அதிகரிக்காதவாறு அதனை தணிக்க வேண்டும். பிரச்னைகளை தூதரக ரீதியில் தீர்ப்பதன் மூலம், சிறந்த அண்டை நாடுகளுக்கான கொள்கையை உறுதி செய்ய முடியும். இரு நாட்டு மக்கள், மற்றும் அப்பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு நலன் பயக்கும் வகையில், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பணியாற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sureshkumar
மே 03, 2025 11:39

சவுதி அரேபியா நாட்டில் அவருடைய நாட்டை சேர்ந்தவர் ஒருவரை கொன்றால், எந்த நாட்டுக் காரணமாக இருந்தாலும் அவர்களை விசாரிக்காமல் அரேபியர்கள் தூக்கிலிடுவார்கள், நம் நாட்டை சேர்ந்தவர்கள் அதுவும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் 26 பேரை பாகிஸ்தான இஸ்லாமியர்கள் கொன்று குவித்துள்ளனர், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்கள் எப்படி நாம் விட முடியும், அரேபியர்களுக்கு ஒரு விதி இந்தியர்களுக்கு ஒரு விதி யா, அரேபியர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது இதில் பேசுவதற்கு,இங்கிருந்து வேலை செய்பவர்களிடம் அரேபியர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று நமக்கு தெரியாதா, அவனிடம் பெட்ரோல் இல்லை என்றால் அவன் ஒரு சல்லாக்காசு, பெரும்பாலும் உன் நாட்டிற்கு முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர்கள் தான் செல்கின்றனர் இந்தியர்கள் அல்ல இந்துக்கள் அல்ல, உண்மையான இந்துக்கள் அரேபியர்கள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வேலை செய்ய மாட்டார்கள், எலக்ட்ரிக் வெஹிகிள் வந்தவுடன் அரேபியர்கள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் சல்லாக்காசு,அவனுக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை அரேபியர்களுக்கு நம்மை பற்றி பேசவும் நம்மை தடுத்து நிறுத்துவதற்கும் முடிந்தால் மோடி அரசாங்கம் அவருக்கு இருபது ஏவுகணைகள் அனுப்பட்டும், விற்பனைக்கு அல்ல அவனைத் தாக்குவதற்கு


rasaa
மே 01, 2025 10:53

இந்த நாய்கள் காங்கிரஸ்போல் திருந்தவே திருந்தாது. இவர்களின் பியூசை பிடுங்க இதுதான் சரியான நேரம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் கைப்பற்ற சரியான தருணம். இந்தியா இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது. மேலும் நம்முடைய எல்லா ஆயுதங்களையும் அதன் திறனை பரிசோதனை செய்ய நல்ல சந்தர்ப்பம். அமைதிக்கும் இவர்களுக்கும் காத தூரம். இந்தியாவை எதிர்த்து கருத்துக்களை பதிவிடும் இங்குள்ள நச்சுப்பாம்புகளின் பல்லை உடனடியாக பிடுங்கவேண்டும்.


ஜகன்
மே 01, 2025 10:43

நாமதான் விழுந்தடிச்சிக்கிட்டு போறோமே..


Kasimani Baskaran
மே 01, 2025 07:33

இந்திய அல்லது பாகிஸ்தானிய இஸ்லாமியர்களை சவுதியரேபியர்கள் பொதுவாகவே காபிர்களுக்கு சிறிது மேல் என்று மட்டுமே நடத்தி வந்தவர்களுக்கு இன்று கவலை என்பது - அவனை ரொம்ப அடிக்காதே என்று சொல்வது போலத்தான்.


Barakat Ali
மே 01, 2025 05:27

தீவிரவாதத்தைக் கண்டிக்கக்கூட இல்லை ...........


மீனவ நண்பன்
மே 01, 2025 02:41

அரபு மொழி பேசும் ஷேக்குகள் தனி தனி நாடாக அமெரிக்காவின் பாதுகாப்பில் இருக்கிறார்கள் ..பணக்கார ஷேக்குகள் ஏழை முஸ்லீம் நாடுகளை கண்டுகொள்வதில்லை ..ஒரே கவலை எப்படி பெட்ரோலியம் பொருட்களை தங்குதடையின்றி தலையில் கட்டுவது


Natarajan V
ஏப் 30, 2025 22:46

ஓநாய்க்கு துக்கம் தொண்டைய அடைக்குதாமா....


ராமகிருஷ்ணன்
ஏப் 30, 2025 22:32

அதெல்லாம் இருக்கட்டும். சவூதியில் பிச்சை எடுக்குற பாகிஸ்தானியர்களை மொதல்ல நாடு கடத்துங்கள்.


புதிய வீடியோ