உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானில் பஸ் கவிழ்ந்து பயங்கர விபத்து; 21 பேர் பலியான சோகம்!

ஈரானில் பஸ் கவிழ்ந்து பயங்கர விபத்து; 21 பேர் பலியான சோகம்!

டெஹ்ரான்: தெற்கு ஈரானில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தெற்கு ஈரானில் பர்ஸ் மாகாணம் ஷைரஸ் பகுதியில் இன்று (ஜூலை 19) 55 பேர் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 21 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 34 பேர் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.ஆண்டுதோறும் ஈரானில் 17 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு தரமற்ற சாலைகள் தான் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

m.arunachalam
ஜூலை 20, 2025 00:47

கவனக்குறைவு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்க கூடியவைதான் . தெளிதல் நலம்.


Nada Rajan
ஜூலை 19, 2025 21:39

ஆழ்ந்த இரங்கல்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை