உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ‛காஷ்மீரில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்: நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அமெரிக்கா சூடு

‛காஷ்மீரில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்: நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அமெரிக்கா சூடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'ஜம்மு - காஷ்மீரில் போராளிகள் தாக்குதல்' என செய்தி வெளியிட்டுள்ள, 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழுக்கு பதில் அளித்துள்ள அமெரிக்க அரசு, 'அது பயங்கரவாத தாக்குதல்' என, தெளிவுபடுத்தி உள்ளது.ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது, எப்போதுமே இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருவதாக ஊடக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.உக்ரைன் - ரஷ்யா விவகாரம் குறித்து செய்தி வெளியிடும் பெரும்பாலான மேற்கத்திய ஊடகங்கள், உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் நுழைவதை, 'ஊடுருவல்' என்றே குறிப்பிடுகின்றன. அதுவே, காஷ்மீர் விவகாரம் குறித்து செய்தி வெளியிடுகையில், 'பாக்., ஊடுருவல்' என்பதற்கு பதிலாக, 'காஷ்மீர் பிரச்னை' என்றே குறிப்பிடுகின்றன. இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்ட அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், 'காஷ்மீர் போராளிகளால், 24 சுற்றுலா பயணியர் சுட்டுக் கொல்லப்பட்டனர்' என, தலைப்பிட்டது. இதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த செய்தியை இணைத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'காஷ்மீரில் நடந்தது பயங்கரவாத தாக்குதல். அதில் எந்த குழப்பமும், மாற்றமும் இல்லை. அது இந்தியாவாக இருந்தாலும் சரி அல்லது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, பயங்கரவாதம் என்று வரும்போது நியூயார்க் டைம்ஸ் உண்மையில் இருந்து விலகி நிற்கிறது' என, குறிப்பிட்டுள்ளது.மேலும், அந்த தலைப்பில் உள்ள, 'போராளிகள்' என்ற வார்த்தையை அடித்துவிட்டு அதற்கு பதில், 'பயங்கரவாதம்' என குறிப்பிட்டதுடன், 'உங்கள் சார்பில் நாங்களே திருத்தம் செய்துவிட்டோம்' என்றும் குறிப்பிட்டுள்ளது.

தண்டிக்க வேண்டும்: அமெரிக்கா திட்டவட்டம்

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டேமி புரூஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் ஆன்மா சாந்தியடையவும், காயம் அடைந்தோர் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறோம். இந்த கடுமையான நேரத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும். இந்த கொடூர பயங்கரவாத செயலை கண்டிப்பதுடன், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெளிவுபடுத்தி உள்ளனர். ஜம்மு - காஷ்மீர் நிலைமையை நாங்கள் கூர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்தியா - பாக்., இடையே நிலவி வரும் பதற்றம் குறித்து, இப்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

வித்தியாசம் என்ன?

போராளிகள் என்ற வார்த்தை, ஒரு குறிப்பிட்ட அரசியல் அல்லது சமூக மாற்றத்திற்காக ஆயுதம் ஏந்தி, ஒரு நாட்டுக்குள் அல்லது மாநிலத்திற்குள் போராடும் கிளர்ச்சியாளர்களை குறிக்கும்.அதுவே, பயங்கரவாதி என்பவர்கள் தேசத்துக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவர்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து ஒரு நாட்டுக்குள் ஊடுருவி, புவியியல் ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்த பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடுபவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ராமகிருஷ்ணன்
ஏப் 26, 2025 10:04

நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் திமுகவின் அல்லக்கை ஊடகமா, அமெரிக்காவுக்கு அவமானம், தூக்குலே தொங்குங்கடா


சுகுமார்
ஏப் 26, 2025 09:16

அப்பாவிகளை இஸ்ரேல் குண்டு வீசி கொன்னா அது தேஷ்பக்தின்னு யூதர்களுக்கு ஆதரவாக எழுதும் நாடு அது.


aaruthirumalai
ஏப் 26, 2025 09:07

போடா ஐரோப்பா அமெரிக்கா வீழ்ச்சிதான் இனிமே ஆசியாதான்.


Raj
ஏப் 26, 2025 08:24

வெளிநாடுகளில் இந்தியாவை பற்றி தவறாக எழுத ஒரு கூட்டம் உள்ளது அவர்கள் இந்தியாவில் இருந்து கட்டுரை எழுதி கொடுக்கிறார்கள் அல்லது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களால் எழுதப்படுகிறது. அப்போ தான் வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்த பொய்களை நம்புவார்கள். எல்லாம் காசுக்காக எதையும் திங்குற கூட்டம்


maan
ஏப் 26, 2025 07:49

இந்தியாவிலேயே பல ஆங்கிலப் பத்திரிக்கைகள் Militants என்ற வார்த்தையைதான் Terrorists என்பதற்கு பதிலாக பயன் படுத்துகின்றன. முக்கியமாக தமிழ்நாட்டில் முன்பு மிக மதிக்கப்பட்ட ஆங்கிலப் பத்திரிக்கை.


சிட்டுக்குருவி
ஏப் 26, 2025 06:47

இதை எழுதினது ஒரு பாகிஸ்தானி எடிட்டர் ஆக இருக்கக்கூடும்.


உண்மை கசக்கும்
ஏப் 26, 2025 04:42

நியூயார்க் நேரத்திற்கு நேரம் சரியில்லை. எப்போதுமே இந்திய எதிரியாக செயல்படும் நியூயார்க் நேரம் .. ஒரு பயங்கரவாதி.


kalyan
ஏப் 26, 2025 02:45

நியூ யார்க் நகரத்தின் இரட்டை கோபுரத்தின் 2001 செப்டம்பர் 11 தேதி நடந்த தாக்குதல்கள் அல் -கைதா போராளிகளால் நடத்தப்பட்டவை என்று நியூ யார்க் டைம்ஸ் எழுத்துமா ?


மீனவ நண்பன்
ஏப் 26, 2025 02:30

பணம் கொடுத்து லாபியிங் செய்வது சர்வசாதாரணம் ..இம்ரான் கானை ஜெயிலிலிருந்து வெளியில் கொண்டு வர டாலர்களை கொட்டி லாபியிங் செய்கிறார்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 26, 2025 01:09

NYT இப்படிச் செய்வது இது முதல் முறை அன்று ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை