உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதி தஹாவூர் ராணாவின் அவசர மனு: அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

பயங்கரவாதி தஹாவூர் ராணாவின் அவசர மனு: அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்:இந்தியாவுக்கு நாடு கடத்தலை நிறுத்த கோரி பயங்கரவாதி தஹாவூர் ராணா தாக்கல் செய்த அவசர மனுவை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவன் லஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தஹாவூர் ராணா. நம் அண்டை நாடான பாகிஸ்தானை பூர்வீகமாக உடைய இவன், தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான்.தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ள 64 வயதான ராணா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறான். நாடு கடத்தக் கூடாது என்ற அவனது கோரிக்கையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது. நாடு கடத்தவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு விட்டன. அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் நாடு கடத்த தேவையான உத்தரவுகளை பிறப்பித்து விட்டார்.கடைசி முயற்சியாக, தான் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அங்கு சித்ரவதை செய்யப்படக்கூடும்; எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தான்.அந்த மனுவும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் தஹாவூர் ராணாவின் கடைசி முயற்சியையும் நீதிமன்றம் சுக்குநூறாக்கியது. விரைவில் தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவான் என்பது உறுதியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ram Moorthy
ஏப் 10, 2025 03:57

இந்த பயங்கரவாதியை இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து இந்திய விசாரணைக்கு அமெரிக்கா அனுப்பி வைக்கும் இல்லை இப்படியே காலத்தை கழித்து விட விருப்பமா


canchi ravi
ஏப் 08, 2025 15:21

வந்ததும் ஒரு கசாப் என்பவரை அனுப்பி தீர்த்து கட்டணம்.


Kasimani Baskaran
ஏப் 08, 2025 04:01

இந்திய சிறையில் ஐந்து நட்சத்திர விடுதி தயாரிக்கும் சிறப்பு பிரியாணி சாப்பிட்டு கால் நூற்றாண்டு விசாரணைக்குப்பின் சகல மரியாதைகளுடன் உயிரை விட வேண்டும் என்று தலையில் எழுதியிருந்தால் அதை யாரால் மாற்றமுடியும்?


SUBBU,MADURAI
ஏப் 08, 2025 00:42

இந்தியா வந்து இறங்கியவுடன் முதலில் அவனது கையையும் காலையும் உடைத்து நடை பிணமாக கூட்டிட்டு போகனும் ஏன்னா அமெரிக்க நீதிமன்றம் அவனை இந்தியாவுக்கு நாடு கடத்தினாலும் நம் நாட்டு நீதியரசர்கள அவனை பத்திரமாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கும் படி உத்தரவு போட வாய்ப்பு இருக்கிறது நம் நாட்டு உணவை தின்பதற்கு முன் முடிந்தால் அவனை போட்டுத் தள்ளினால் கூட பரவாயில்லை பல வருடங்களாக நீதிபதிகள் விசாரித்து அவனுக்கு சாதகமாக தீர்ப்பை கொடுக்கும் முன் அவனை எமலோகத்துக்கு அனுப்பி விடுவதே உத்தமம். அதன் பிறகு நீதி வழுவாத இந்திய நீதிபதிகளின் கண்டனத்தோடு இந்த வழக்கு முடித்து வைக்கப் படும்.


மீனவ நண்பன்
ஏப் 07, 2025 22:59

எல் சால்வேடார் சிறைக்கு அனுப்பலாம் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை