உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காங்கோ சர்ச்சில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 21 பேர் உயிரிழப்பு

காங்கோ சர்ச்சில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 21 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கின்ஷாசா: காங்கோ சர்ச்சில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் கொமாண்டா நகரில் சர்ச் ஒன்று உள்ளது. இன்று சர்ச்சில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள், அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஆனாலும் பயங்கரவாதிகள், குறிவைத்து சரமாரியாக சுட்டனர். மேலும், சர்ச்சிற்கு அருகே இருந்த சில வீடுகள் மற்றும் கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இந்த கொடூர சம்பவத்தில், மத அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.சர்ச்சில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு, பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 28, 2025 10:11

ஐரோப்பிய கிறிஸ்தவம் வளர வேண்டும் என்றால் ஐரோப்பியர்களின் மக்கள்தொகை உயர வேண்டும். தானாகவே ஒரிஜினல் ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயரும், வளரும். அதேபோன்றுதான் அரேபிய இஸ்லாமும். அரபிகள் மக்கள்தொகை கூடினால் ஒரிஜினல் அரேபிய இஸ்லாமியர் எண்ணிக்கை உயரும், வளரும். இந்த அறிவு இன்னமும் அவர்களுக்கு வரவில்லை. அதைவிடுத்து போகிறவன், வருபவனை எல்லாம் ஐயா வாங்க அம்மா வாங்க என்று கூவிக் கூவி மதம் மாற்றியதன் விளைவு இன்று ஒரிஜினல் கிறிஸ்தவ, இஸ்லாமியர்களை விட டூப்ளிகேட் கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் எண்ணிக்கை கூடிவிட்டது. இந்த டூப்ளிகேட் கூட்டம் ஒரிஜினல் மதவாதிகள் செய்த அதே தவறை தொடர்ந்து, தங்களின் இன்னும் மதம் மாறாதவர்களை தொடர்ந்து தங்கள் மதத்திற்கு மாற்ற முயல்கிறார்கள். இப்போது டூப்ளிகேட் சொல்வதை ஒரிஜினல் ஆட்கள் கேட்கும் நிலைக்கு பிரச்சனை பெரிதாகிவிட்டது. இந்த டூப்ளிகேட் மக்கள் ஐரோப்பா அல்லது அரேபியா சென்றால் அங்கு இவர்களை இரண்டாம்தர மக்களாகத்தான் பார்க்கிறார்கள் - கோவாவில் இருக்கும் கிறிஸ்தவர் ஒருநாளும் போர்த்துக்கீஸ் கிறிஸ்தவராக மாற முடியாது. பாண்டிச்சேரியில் இருக்கும் கிறிஸ்தவர் ஒருநாளும் பிரெஞ்சு கிறிஸ்தவராக மாற முடியாது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் பரவியுள்ள முஸ்லிம் ஒருநாளும் அரபி முஸ்லிமாக மாற முடியாது. அவர்கள் மதம் மாறிகளை அங்கீகரிக்க மாட்டார்கள். ஆப்பிரிக்கா, இந்தியாவில் உள்ள கடைசி மனிதனை கிறிஸ்தவன் அல்லது முஸ்லிமாக மாற்றிவிட்டாலும் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது. அதுதான் உண்மையும்கூட. அவனவன் தனது நிலத்தின் உண்மையான தத்துவங்களின்படி வாழ்ந்தால் இந்த பிரச்சனை வராது.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 28, 2025 09:38

அமைதி, அமைதி, அமைதி. மயான அமைதி. ஓலா ஊபர்.


Kulandai kannan
ஜூலை 27, 2025 19:37

இரு மதங்களும் ஆஃப்பிரிக்காவில் போட்டி போட்டு மதமாற்றம் செய்ததன் விளைவு இன்று அங்கு தினசரி துப்பாக்கி சூடு. நல்லவேளை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சில குரூப்புகள் தென்னிந்தியாவுக்கு வந்து செட்டிலாகி விட்டார்கள்.


vadivelu
ஜூலை 27, 2025 20:28

இருக்கிறவங்கள இரண்டு பெரும் மாறி மாறி மதம் மாற்றி விட்டு இறுதியில் மாற்றுவதற்கு ஆட்கள் குறைந்த பின் அவர்களுக்குள் ஒருத்தரை ஒருத்தர் அடித்து கொள்வார்கள்.


sridhar
ஜூலை 27, 2025 19:21

கிறிஸ்துவர்களை இஸ்லாமியர்கள் சுட்டால் நம் அரசியல்வாதிகள் கருத்து சொல்ல மாட்டார்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை