வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இன்னிங்ஸ் defeat, india 100 run அடிச்சா அதிகம். ராகுல், விராட் வேஸ்ட் அதுக்கு சாம்சன் சூர்யா ஓகே, அதே போல் சிராஜ் அவுட் of form
பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த்தில் நடக்கும், 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், டாஸில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் இன்று, பெர்த்தில் உள்ள புதிய ஆப்டஸ் மைதானத்தில் துவங்குகிறது. கிடைக்குமா 'ஹாட்ரிக்'
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி கடைசியாக பங்கேற்ற இரு தொடரிலும் (2018-19, 2020-21) கோப்பை வென்றது. மீண்டும் அசத்தும் பட்சத்தில் 'ஹாட்ரிக்' கோப்பை கைப்பற்றலாம். ஆனால் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக அடைந்த தோல்வியால், இந்திய வீரர்கள் மனதளவில் காயப்பட்டுள்ளனர்.டெஸ்ட் அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மகன் பிறந்துள்ளதால், இவர் முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை. இவருக்குப் பதில் பும்ரா, கேப்டனாக களமிறங்குகிறார். டாஸ் வென்ற கேப்டன் பும்ரா, பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளார்.11 வீரர்கள்:
* கே.எல் ராகுல்* ஜெய்ஸ்வால்* படிக்கல்* விராத் கோலி* ரிஷப் பண்ட்* துருவ் ஜூரல்* நிதிஷ் ரெட்டி* வாஷிங்டன் சுந்தர்* ஹர்சித் ராணா* பும்ரா (கேப்டன்)* சிராஜ்
இன்னிங்ஸ் defeat, india 100 run அடிச்சா அதிகம். ராகுல், விராட் வேஸ்ட் அதுக்கு சாம்சன் சூர்யா ஓகே, அதே போல் சிராஜ் அவுட் of form