உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இந்திய பல் மருத்துவர் கொலையில் திருப்பம்: டெக்சாஸ் நபர் கைது

அமெரிக்காவில் இந்திய பல் மருத்துவர் கொலையில் திருப்பம்: டெக்சாஸ் நபர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, போலே சந்திரசேகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், டெக்சாஸ் நகரை சேர்ந்த 28 வயதான ரிச்சர்ட் புளோரஸ் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த சந்திரசேகர் போலே, 27, என்பவர் பல் அறுவை சிகிச்சை மருத்துவ படிப்பை முடித்திருந்தார். மேல் படிப்புக்காக அவர் கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்று இருந்தார். 6 மாதங்களுக்கு முன்பே முதுநிலைப் படிப்பை முடித்த சந்திரசேகர், வேலைக்காக அங்கேயே வசித்து வந்த நிலையில் அங்குள்ள கேஸ் ஸ்டேஷனில் பகுதிநேர வேலையும் செய்து வந்தார்.சில தினங்களுக்கு முன், கேஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த சந்திரசேகரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில், டெக்சாஸ் நகரை சேர்ந்த 28 வயதான ரிச்சர்ட் புளோரஸ் என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த ஒரு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த நபரிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சண்முகம்
அக் 08, 2025 08:16

பல் மருத்துவம் படிக்கப் போனாரா, இல்லை பெட்ரோல் ஸ்டேஷனில் வேலை செய்யப் போனாரா?


cpv s
அக் 07, 2025 12:50

why this people are going america


M Ramachandran
அக் 07, 2025 11:53

சோர்ஸ் போர்ஸ்ஸ்னு பேரை வச்சுக்கிட்டு இந்தியர்களுக்கு எதிராக வேலை ய செய்யும் தேச விரோதிகள் அவனுடன் கூட்டு வைத்துக்கொண்டு நம் நாட்டில் பிறந்து அவன்குலடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் .. ஒன்னும் யேற்படுவதில்லை.


sankaranarayanan
அக் 07, 2025 11:28

இந்திய வாழ் அமெரிக்க மக்களே இது ஓர் எச்சரிக்கை இனியாவது அமெரிக்காவில் கேஸ் ஸ்டேஷனில் பணி புரியாதீர்கள் இது ஒன்றும் புதிது அல்ல இரண்டாவது தனிமையில் எந்த வேலையும் அமெரிக்காவில் பணத்திற்காக வேலை செய்யாதீர்கள் நான்கு ஐந்து பேர்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரியும் இடத்தில் வேலை புரியுங்கள் பணத்திற்காக எங்குமே தனிமையாக வேலையே செய்யாதீர்கள் ஆபத்து ஆபத்து


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 07, 2025 12:21

இந்திய வாழ் அமெரிக்க மக்களே என்று கூறுவது தவறு. அமேரிக்கா வாழ் இந்திய மக்களே என்பதே சரி


Ramesh Sargam
அக் 07, 2025 10:33

வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்கள் அங்கு வந்து படித்து, ஒரு நல்ல வேலையில் சேர்ந்து முன்னுக்கு வருவது அங்குள்ள பல சோம்பேறிகளுக்கு பிடிப்பதில்லை. ஆகையால்தான் இப்படி வெளிநாட்டவர்களை குறிவைத்து அவர்கள் தாக்குகிறார்கள்.


Field Marshal
அக் 07, 2025 13:14

நீங்க ரொம்ப நாளா அமெரிக்கா போகாம இங்கேயே இருக்கீங்க ..


KrishnaKumar
அக் 07, 2025 10:22

Hearty condolences.... its very unfortunate that after years of hard work to become doctor but has to die in an unknown land. Pls well educated Youths reduce your movement to US or EU, as its not safe now a days..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை