உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  மதுக்கூடங்களுக்கான நேர கட்டுப்பாடு தடையை விலக்கியது தாய்லாந்து அரசு

 மதுக்கூடங்களுக்கான நேர கட்டுப்பாடு தடையை விலக்கியது தாய்லாந்து அரசு

பாங்காக்: சு ற்றுலாத்துறையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, தாய்லாந்தில் மதிய நேர மதுபான விற்பனைக்கான தடையை அந்நாட்டு அரசு விலக்கி உள்ளது. தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தில், தற்போது மதுபான விற்பனைக்கு இரண்டு கட்டமாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே மதுபான கூடங்கள் திறக்கப்பட வேண்டும். அதன்பின், மாலை 5:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மதியம், 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மதுக்கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. விதியை மீறுவோருக்கு, 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. சுற்றுலா துறை வருவாயை பெரிதும் நம்பியுள்ள தாய்லா ந்தில், இந்த நேரக் கட்டுப்பாடு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், சுற்றுலா துறையினர் அரசுக்கு அழுத்தம் தர துவங்கினர். இதையடுத்து, மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலான தடையை விலக்கிக்கொள்ள அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து, தாய்லாந்து முழுதும் காலை 11:00 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, தொடர்ச்சியாக மதுக்கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த தடை விலக்கு, ஆறு மாத சோதனை திட்டமாக அமல்படுத்தப்படும்; இது, அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை