உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகமே எதிர்பார்க்கும் தேர்தல்; அமெரிக்காவில் நாளை ஓட்டுப்பதிவு

உலகமே எதிர்பார்க்கும் தேர்தல்; அமெரிக்காவில் நாளை ஓட்டுப்பதிவு

நியூயார்க்: உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நவ.,5ல் நடக்கிறது. உலகின் ஒரே வல்லரசு நாடு என்ற பெருமைக்குரிய அமெரிக்க அதிபர் தேர்தல், நான்காண்டுக்கு ஒரு முறை நடக்கிறது. இப்போது நடக்கும் தேர்தலில், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பிலும், முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y1gd21nz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதிபர் தேர்தலில் போட்டியிடுவோர் நேரடியாக மக்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தாலும், மக்கள் நேரடியாக அதிபரை தேர்வு செய்வதில்லை. 'எலக்ட்ரோல் காலேஜ்' முறை பின்பற்றப்படுகிறது. இந்த எலக்ட்ரோல் காலேஜ் மொத்த ஓட்டு எண்ணிக்கை 538 ஆகும். இதில், 270 பிரதிநிதிகளின் ஓட்டுக்களை பெறுபவர், அதிபராக தேர்வு செய்யப்பட்டதாக அர்த்தம். ஒவ்வொரு மாநிலத்துக்கும், மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு விதமான எலக்ட்ரோல் காலேஜ் ஓட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.உதாரணத்துக்கு, அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியா மாநிலத்துக்கு 54 எலக்ட்ரோல் காலேன் ஓட்டுகள் உள்ளன. சிறிய மாநிலமான வியாமிங் 3 ஓட்டுகளை மட்டுமே கொண்டுள்ளது. இதில், 48 மாநிலங்களில், அதிக ஓட்டுகளை பெற்று வெற்றி பெறுவோர், அனைத்து எலக்ட்ரோல் காலேஜ் ஓட்டுகளையும் கைப்பற்றி விடுவர். மைன், நெப்ரஸ்கா மாநிலங்களில் மட்டும் விகிதாச்சார அடிப்படையில், இரண்டாமிடம் பெறுபவருக்கும் கொஞ்சம் ஓட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.அமெரிக்காவின் 50 மாநிலங்களில் சிலவற்றில் வழக்கமாக குடியரசு கட்சிக்கும், சில மாநிலங்களில் ஜனநாயக கட்சிக்கும் ஆதரவாக ஓட்டுக்கள் கிடைக்கும். ஆனால், சில மாநிலங்களில் இரு கட்சியும் மாறி மாறி முன்னிலை பெற்று ஓட்டுகளை கைப்பற்றுவர். அப்படிப்பட்ட 7 முக்கிய மாநிலங்களில், டிரம்ப், கமலா ஹாரிஸ் இருவரும், இந்த வாரம் முழுவதும் கவனம் செலுத்தினர். அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய அந்த 7 மாநிலங்களில் கடும் போட்டி நிலவுகிறது.இதில், மிச்சிகன், விஸ்கான்சின் மாநிலங்களில் மட்டும் கருத்துக்கணிப்பில் கமலா முன்னிலையில் இருக்கிறார். மற்ற மாநிலங்களில் டிரம்ப் தான் முன்னிலையில் இருக்கிறார். தேர்தலில் ஒரு வேளை தோற்றுப்போனால், கடந்த தேர்தலில் நடந்தது போல, இம்முறையும் வன்முறையை துாண்டி விடவும், முடிவை ஏற்காமல் முரண்டு பிடிக்கவும் டிரம்ப் தயாராகி விட்டதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.ஆனால், நான் வெற்றி பெறுவது உறுதி என்று டிரம்ப் தொடர்ந்து தம்பட்டம் அடித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக எக்ஸ் தளம் உரிமையாளர் எலான் மஸ்க்கும் தீவிர பிரசாரம் செய்கிறார். இத்தகைய சூழ்நிலையில், முன்கூட்டியே ஓட்டளிக்கும் நடைமுறைப்படி, மெயில் மூலம் ஓட்டுப்பதிவு அனைத்து மாநிலங்களிலும் நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடிகளில் வந்து ஓட்டளிக்கும் முறைப்படியான தேர்தல் நாளை நவ.,5ல் நடக்கிறது. கருத்துக்கணிப்புகளில் டிரம்ப் முன்னணியில் இருப்பதாகவும், அவருக்கும், கமலா ஹாரிசுக்கும் நுாலிழை அளவு மட்டுமே வித்தியாசம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. டிரம்பும், அவரது ஆதரவாளர்களும், வெற்றிக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதால், கடந்த தேர்தலை போலவே, இந்த முறையும் இறுதி வரை திக்…திக்… மனநிலையுடன் தான் தேர்தல் நிலவரம் இருக்கும் என்று உறுதியுடன் சொல்கின்றனர், அமெரிக்க வாக்காளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Easu
நவ 04, 2024 21:00

டிரம்ப் ஜெயிப்பார்


Easwar Kamal
நவ 04, 2024 19:25

உலக அமைதி இப்போது உள்ள நிலயில் அமெரிக்காவில் இப்போது யார் ஆட்சிக்கு வந்தாலும் அது நடக்காத காரியம். டிரம்ப் அமெரிக்கா அதிலும் குறிப்பாக தன குடும்பம் எந்த விதத்திலும் கஷ்ட பட கூடாது என்று சுயநலம் மிக்கவர். trumpan செய்த தவறை தன வாங்கி கொண்டு குடும்பத்தை காப்பாத்தி கொண்டு இருக்கிறார். டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் nalaykae புடின் காலில் விழுந்து உக்ரைன் பலி அடாகி விடுவார். idhae நாலாய்க்கு இந்தியாவுக்கு சீனா மற்றும் பாக்கிஸ்தான் எதிர் கொண்டால் கண்டுக்கணமால் போய் விடுவார், trumpan ஒரு பிசினஸ்மேன் யார் பக்கம் கற்று வீசுகிறதோ அந்த பக்கம் போய் விடுவார். அவர் இருந்த காலத்தில் இந்தியாவுக்கு செஞ்ச நல்ல காரியம் வரியை யுயர்த்தியது இதனால் சீனாவுடன் இந்தியாவும் பாதிக்க பட்டது. கொரோன காலத்தில் உலகமே தங்களை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இவர் இந்தியாவுக்கு வந்து stadlum திறந்து வைத்து இந்தியர்கள் ஓட்டு கிடாய்க்கும் என்று எதிர்பார்த்தார் ஆனால் 70% இந்தியர்கள் ஒட்டு கமலா/bidenkuthan சென்றது. இம்முறையும் அதுவே தான் நடக்க போகிறது. இப்போது elan நட்பு வேற இந்த elan புடின் சிறந்த நண்பர் வேற. புடின் என்றைக்கும் அமெரிக்காவுடன் நட்பு கொள்ளமாட்டார் ஏன் என்றல் அமெரிக்காதான் ரஷ்யாவை சிதைத்தது. இந்த புடின் என்றைக்கும் அமெரிக்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் அதற்கு trumpan /elan போன்றோர் தேவை. இதை அமெரிக்கர்கள் என்றைக்கும் உணர்வார்கள்.


Rpalnivelu
நவ 04, 2024 17:48

உலக அமைதிக்கு டிரம்ப் வந்தாலே நல்லது


Balasubramanian
நவ 04, 2024 16:43

கருத்து கணிப்பு ஹரியானா போல முடியும் என்று எதிர் பார்போம்! பிறகாவது நமது எதிர் கட்சிகள் நமது தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்வதை விட்டு விட்டு அதன் மேன்மையை புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம்


Ramesh Sargam
நவ 04, 2024 12:36

இருவரில் யார் அடுத்த அதிபர் ஆனாலும், அவர்களால் இந்தியாவுக்கு அந்த அளவுக்கு பெரியதாக எதுவும் நன்மை இல்லை. இந்தியா எங்களுடைய நண்பன் என்று கூறுவார்கள். அவ்வளவுதான்.


SUBBU,MADURAI
நவ 04, 2024 13:43

அவர்கள் இருவரும் இந்தியாவிற்கு எந்த நன்மையும் செய்யா விட்டாலும் ட்ரம்ப் நமக்கு கெடுதல் பண்ண மாட்டார். ஆனால் இந்த நடிகை கமலாஹாரிஸ் Article 370 சட்டத்தை நீக்கி ஜம்மு காஷ்மீரை பாரதத்துடன் சேர்த்ததற்கு பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு அந்நாட்டுக்கு ஆதரவாக முதல் ஆளாக இந்தியாவிற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தவர் என்பதை தாங்கள் நினைவில் கொள்ள வேண்டும். கமலாஹாரிஸ் மட்டுமல்ல அவர் சார்ந்த Democratic Party யை சேர்ந்த பில்கிளிண்டன் முதல் பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடன் வரை மறைமுகமாகவும் சில சமயம் நேரடியாகவும் இந்தியாவிற்கு கெடுதல் செய்பவர்களே அவர்களை பொறுத்தவரை நம் நாடு வளரந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள் எ.கா இப்போது கனடாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவை சீண்டுவது அது மட்டுமல்ல அவர்களின் ஜனநாயக கட்சிக்கு நம் இந்தியாவையும் இந்துக்களையும் அறவே பிடிக்காது மற்ற நாடுகளில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டிக்காமல் கண்டுகொள்ளாமல் கவனமாக கடந்து சென்று விடுவார்கள் அதே நேரம் இந்துக்களால் இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நேட்டோ நாடுகளுடன் சேர்ந்து கொண்டு அறிக்கை விட்டு அவர்களின் New York Times, Washington post போன்ற பத்திரிகைகளில் அவதூறு பரப்புவார்கள் அதற்கு லண்டன் BBC யும் உடந்தை. ஆனால் இதே அமெரிக்காவின் Republican Party யான டொனால் ட்ரம்ப் கட்சி இவ்வாறான அவதூறுகளை பரப்ப மாட்டார்கள் அதாவது நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாமலாவது இருப்பார்கள் குறிப்பாக Donald Trump ன் குடியசுக் கட்சி இந்துக்களுக்கு ஆதரவான கட்சி எ.கா சமீபத்தில் பங்ளாதேஷ் நாட்டில் அங்கு வாழும் மெஜாரிட்டி முஸ்லீம்கள் பெரிய கலவரத்தில் ஈடுபட்டு அங்குள்ள இந்துக்கள் பலரை படுகொலை செய்து பல இந்துக் கோவில்களை இடித்து அராஜகத்தில் ஈடுபட்டனர் அங்கு வாழும் இந்துக்களுக்கு ஆதரவாக பைடனோ அல்லது கமலாஹாரிஸோ அங்குள்ள முஸ்லீம் மத வெறியர்களை கண்டிக்கவே இல்லை குறைந்தபட்சம் ஒரு சிறிய கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை. அதே சமயத்தில் டொனால் ட்ரம்ப் இந்துக்களுக்கு ஆதரவாக பங்ளாதேஷை கண்டித்து கடும் கண்டனத்தை தெரிவித்தார். அமெரிக்க அதிபர்களின் வரலாற்றில் எனக்கு தெரிந்து இந்துக்களுக்காக ஒரு முஸ்லீம் நாட்டை கண்டித்தது ட்ரம்ப் ஒருவராகத்தான் இருப்பார். அதனால் இதை படிக்கும் நம் தாய்நாட்டை நேசிக்கும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் இந்திய வம்சாவழியினரும் நம் நாட்டின் நன்மை கருதி அங்கு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த Donald Trump ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


முக்கிய வீடியோ