வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அந்த மாத்திரை மட்டும் அன்று கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், இன்று உலகில் நாம் நிற்க கூட இடம் இருந்திருக்காது. அந்த அளவுக்கு மக்கள் தொகை பெருகியிருக்கும்.
பாரிஸ்: கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த ஐரோப்பிய நாடான பிரான்ஸ் விஞ்ஞானியும், டாக்டருமான எட்டியென்- எமிலி பவுலியூ, 98, வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம்காலமானார்.கடந்த, 1926ல் பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் எட்டியென் ப்ளூமில் பிறந்த பவுலியூ, நாளமில்லா சுரப்பியியல் நிபுணர் ஆவார்.ஸ்டீராய்டு ஹார்மோன்களில் அவரது ஆராய்ச்சிகள், மருத்துவத் துறையில் முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தன.கடந்த 1963ல் தனியாக ஹார்மோன் ஆராய்ச்சி பிரிவை அவர் நிறுவினார். அதன் தலைவராக, 1997 வரை இருந்தார்.கருக்கலைப்புக்கான, ஆர்.யு., -486 என்ற மருந்தை, 1982ல் அவர் கண்டுபிடித்தார். இதைத் தவிர, மனசோர்வு உள்ளிட்ட பல ஹார்மோன் தொடர்பான மாத்திரைகளையும் அவர் கண்டுபிடித்தார்.
அந்த மாத்திரை மட்டும் அன்று கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், இன்று உலகில் நாம் நிற்க கூட இடம் இருந்திருக்காது. அந்த அளவுக்கு மக்கள் தொகை பெருகியிருக்கும்.