உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா மீது மிகுந்த மரியாதை உள்ளது

இந்தியா மீது மிகுந்த மரியாதை உள்ளது

'இந்தியா மீது மிகுந்த மரியாதை உள்ளது' நேபாளத்தின் இடைக்கால அரசின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள சுசீலா கார்கி, 73, நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர். நேபாள சட்டக் கல்லுாரியில் சட்டப்படிப்பும், உத்தர பிரதேசத்தின் பனாரஸ் ஹிந்து பல்கலையில் அரசியல் அறிவியல் படிப்பும், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் முதுநிலை சட்டமும் படித்தவர். ஊழல், சுதந்திரம், சமத்துவம் பற்றி முக்கிய தீர்ப்புகளை வழங்கி உள்ளார். சுசீலா கார்கி நேற்று கூறியுள்ளதாவது: என் மீது நம்பிக்கை வைத்து, இடைக்கால அரசின் தலைமை பொறுப்புக்கு தேர்வு செய்தவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் நலனுக்காக சேவையாற்ற தயாராக உள்ளேன். இந்தியாவின் வாரணாசி பனாரஸ் ஹிந்து பல்கலையில் படித்தேன். இந்தியர்கள் மீது எனக்கு மிகவும் மரியாதை உள்ளது. இந்தியத் தலைவர்களின் செயல்பாடுகளால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். அவர்கள் என்னை ஒரு சகோதரியாக பார்க்கின்றனர். இந்தியாவை நான் நட்பு நாடாகவே பார்க்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி செயல்பாடுகளால் நான் கவரப்பட்டுள்ளேன். அவருக்கு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். நேபாளத்துக்கு இந்தியா பல வகைகளில் உதவி செய்துள்ளது. நேபாளத்தின் நலனையே இந்தியா விரும்புகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நல்ல நட்பு உள்ளது. அதைத் தொடருவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ