வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையே இல்லை; நம்பச் சொல்கிறார் யூனுஸ்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக எந்த வன்முறையும் நிகழவில்லை என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்து உள்ளார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, பதவி விலகியதைத் தொடர்ந்து, அங்கு ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கத் துவங்கியது. ஹிந்து கோவில்கள் இடிக்கப்படுவதும், ஹிந்துக்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகவே உள்ளது. ஹிந்து கோவில்களில் சிலைகள் சேதமடைந்திருக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டும் இருக்கிறது.தற்போது அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியில் இருக்கிறது. ஹிந்து கோவில்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி மத்திய அரசு பலமுறை வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர், ஜெட்டியோவைச் சேர்ந்த மெஹ்தி ஹசனுடன் ஒரு நேர்காணலில் முகமது யூனுஸ் கூறியதாவது: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மற்றும் ஹிந்துக்கள் தாக்கப்படுவதாக வெளியாகும் அனைத்து செய்திகளும் போலியானவை. அந்த போலி செய்திகளை நீங்கள் நம்ப கூடாது.சில நேரங்களில் சில மோதல்கள், சில குடும்பப் பிரச்னைகள், நிலப் பிரச்னைகள் மற்றும் ஏதாவது இருக்கலாம். இதுபோன்ற மோதல்களுக்கு வகுப்புவாத சாயம் பூசுவது சரியல்ல. இந்த விஷயத்தில் வங்கதேச இடைக்கால அரசு மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.ஏனென்றால், இந்தியா எப்போதும் வலியுறுத்தி வரும் ஒரே விஷயம் இதுதான்.நான் அவர்களை ஒரு சமூகமாக சந்திக்கும் போது, 'நான் ஒரு ஹிந்து, அதனால் என்னைப் பாதுகாக்க வேண்டும். நீங்கள் வங்கதேசத்தை விட்டு செல்ல வேண்டாம் என்று நான் கூறுவேன். எப்போதும் 'நான் இந்த நாட்டின் குடிமகன். மக்களுக்கு அரசு வழங்க வேண்டிய அனைத்து பாதுகாப்புகளையும் உறுதி செய்வேன். இவ்வாறு முகமது யூனுஸ் கூறினார்.