உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தெஹ்ரான்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்தது. 90 ஆயிரத்து 589க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sqm7lrtl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார். ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தபோது தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

சிந்தனை
ஜூலை 31, 2024 22:59

அப்படியே உங்க ஃபிளைட்ட கொஞ்சம் திருப்பி, இந்த பாகிஸ்தானிலும் கொஞ்சம் குண்டுகளை போட்டுட்டு போயிடுங்களேன்...


Jagan (Proud Sangi)
ஜூலை 31, 2024 21:14

தீவிவாதிகளை ஒழிக்கும் இசுரேலுக்கு நன்றி. தீவிரவாதிகளை ஒழிக்காமல் தீவிரவாதம் ஒழியாது


பேசும் தமிழன்
ஜூலை 31, 2024 21:07

ஒரு தீவிரவாதியும் தப்ப கூடாது... இஸ்ரேல் நாட்டுக்கு உலக நாடுகள் அனைத்தும் ஆதரவு கொடுக்க வேண்டும்.


Rpalnivelu
ஜூலை 31, 2024 15:23

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டுமென்றால் பாலஸ்தீனியர்கள் பயங்கரவாதத்தை பரப்பும் ஹமாஸ் மற்றும் ஹெஸ்போல்லா போன்ற தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கவே கூடாது. இவர்களால் பாலஸ்தீனியர்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. உலக நாடுகள் இஸ்ரேலுக்கே ஆதரவு தெரிவிகின்றனர். பாலஸ்தீனியர்களின் நன்மை இஸ்ரேலிடமே உள்ளது.


Sridhar
ஜூலை 31, 2024 14:42

வியக்கத்தக்க பிரமிப்பான செயல் இவர்களுக்கு எப்படி தகவல் கிடைக்கிறது, பலநூறு மயில்கள் கடந்து எவ்வாறு குறித்தவறாமல் அவர்களுடைய இலக்கை அடைகிறார்கள் என்று சாதாரண மக்களாகிய நமக்கு புரிபடமாட்டேன்குது. கூடவே ஒரு கேள்வி, இவ்வளவு திறமைகள் உள்ளடங்கிய உங்கள் ராணுவத்துக்கு ஏன் இன்னும் அவர்களை முழுவதுமாக அழிக்கமுடியவில்லை? ஏன் உங்கள் பிணைக்கைதிகளை மீட்கமுடியவில்லை?


Rpalnivelu
ஆக 01, 2024 23:19

பணம் பத்தும் செய்யும் என்பது உலக மொழி. இஸ்ரேல் தன்னுடைய உளவுத்துறைக்கு மிக அதிகமாக பணத்தை பாய்ச்சுகிறது. பணத்துக்காக எதையும் செய்பவர்கள்/ காட்டி கொடுப்பவர்கள் மிக அதிகம்.


பெரிய ராசு
ஜூலை 31, 2024 13:56

அருமை .


கிருஷ்ணதாஸ்
ஜூலை 31, 2024 13:44

இ(ஸ்ரேல்)ப் படை தோற்கின் எப்படை வெல்லும்!


karupanasamy
ஜூலை 31, 2024 12:46

இந்த தாக்குதலை நடத்தியவர்களின் கைகளை முத்தமிடுவோம்.


Muralidharan S
ஜூலை 31, 2024 12:38

நமது நாடு இஸ்ரேலின் கொள்கையை பின்பற்றி, எல்லை கடந்து சென்று தீவிரவாதிகள் அழிக்க வேண்டும்.


Anand
ஜூலை 31, 2024 12:24

இங்குள்ள கூட்டுக்களவாணி கூட்டணி துக்கம் அனுசரிக்கும். மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ