உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம்; உறவுகள் சிறப்பாக இருக்கிறது என்கிறார் அதிபர் டிரம்ப்!

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம்; உறவுகள் சிறப்பாக இருக்கிறது என்கிறார் அதிபர் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இரண்டு நாட்கள் நீடித்த தீவிர வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே வர்த்தக போர் நடந்தது. இரு நாடுகளும் மாறி, மாறி வரி விதித்ததால் வர்த்தகப் போர் உச்சம் தொட்டது. இதையடுத்து இருநாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் வர்த்தகப் போர் முடிவுக்கு வந்தது. தற்போது 2 நாட்களாக அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது என அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8wuvafs8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு காந்தங்கள் மற்றும் அரிய பூமி தாதுக்களை சீனா வழங்கும். அதேபோல், எங்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் சீன மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்.நாங்கள் மொத்தம் 55% வரிகளைப் பெறுகிறோம், சீனா 10% பெறுகிறதுஅமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உறவுகள் சிறப்பாக இருக்கிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதன் வாயிலாக அமெரிக்க, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வந்த வர்த்தகப் போர் முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rangarajan Cv
ஜூன் 12, 2025 11:13

Not confirmed by China. Their team is skeptical on nitty gritty of the contents. As usual US preempted by announcing. Will wait for China's reaction


Ramesh Sargam
ஜூன் 11, 2025 19:34

அமெரிக்கா, சீனா உறவு கணவன் மனைவி உறவுபோல. காலையில் அடித்துக் கொள்வார்கள். மாலையில் சூரியன் மறைந்தபிறகு கூடிக்கொள்வார்கள்.


மீனவ நண்பன்
ஜூன் 11, 2025 19:13

காலை எட்டு மணிக்கு இவர் சொல்வதற்கும் இரவு எட்டு மணிக்கு அவர் சொல்வதற்கும் சம்மந்தமே இருக்காது


Ramesh Sargam
ஜூன் 11, 2025 19:33

மிக மிக சரியாக சொன்னீர்கள்.


சமீபத்திய செய்தி