உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வர்த்தக பேச்சு சிறப்பாக நடக்குது: மோடி சிறந்த மனிதர், எனது நண்பர் என்கிறார் அதிபர் டிரம்ப்

வர்த்தக பேச்சு சிறப்பாக நடக்குது: மோடி சிறந்த மனிதர், எனது நண்பர் என்கிறார் அதிபர் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பிரதமர் மோடி எனது நண்பர், அவர் சிறந்த மனிதர். இந்தியா உடனான வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா பெரும்பாலும் நிறுத்திவிட்டது. பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1dsx4ffd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் என்னுடைய நண்பர், நாங்கள் பேசுகிறோம், அவர் நான் அங்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். நான் செல்வேன். பிரதமர் மோடி உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடந்து வருகிறது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.

டிரம்ப் பதில்!

அடுத்த ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, ​​'இருக்கலாம், ஆம்' என்று அதிபர் டிரம்ப் பதிலளித்தார். அமெரிக்காவின் கடுமையான வரிகளை விதிக்கும் முடிவை தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் குவாட் உச்சி மாநாட்டிற்காக அமெரிக்க அதிபர் இனி இந்தியாவுக்கு வர மாட்டார் என தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் தான் இந்திய பயணம் குறித்து அதிபர் டிரம்ப் பதில் வந்துள்ளது.

முதல்முறையல்ல!

பிரதமர் மோடியை டிரம்ப் புகழ்ந்து பேசுவது முதல்முறையல்ல. அவர் பலமுறை மோடியை சிறந்த நண்பர், சிறந்த மனிதர் என பாராட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Anbarasu K
நவ 07, 2025 12:17

அதிபர் ஆ இருக்க தகுதியே இல்லாதவரை இரண்டாவது முறையா செலக்ட் பண்ணி தப்பு பண்ணிட்டாங்க அந்த நாட்டு மக்கள்


திகழ்ஓவியன்
நவ 07, 2025 12:04

நமக்கு வாய்த்த அடிமைகளில் இவர் தான் நல்ல ஒத்துழைக்கிறார் , ரசியவுடன் இருந்து எண்ணை வாங்குவது நிறுத்தம்


sankaranarayanan
நவ 07, 2025 11:40

அமெரிக்க அதிபர் டிரம்பின் நண்பராக பழகி ஆளை முடிவுக்கட்டும் சூழுச்சி பலிக்க வில்லை இனியும் பலிக்காது தன் வினை தன்னைச்சுடும் என்றாற்போல அந்த சூழ்ச்சி டிரம்பையே வெகு விரைவில் பாதிக்கும் மோடி இந்தியாவை ஆள இன்னும் பல காலம் நிச்சயக்கப்பட்டிருக்கிறது அதை எந்த கொம்பனாலும் மாற்றவே முடியாது


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 07, 2025 11:32

இது மோடிக்குத் தெரியுமா


Anand
நவ 07, 2025 10:50

இந்தாளு இந்தாண்டு பதவியேற்ற நாள் முதல் இதுவும் சேர்த்து இவரோட அறுநூற்றி எண்பத்தி எட்டாவது பொய்.


arunachalam
நவ 07, 2025 10:46

டிரம்ப்க்கு வயதாகிவிட்டது. ரொம்ப சுயநலக்காரனாக மாறிவிட்டார். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்கிற நிலையில் இருக்கிறது அவர் பேச்சு. இவரை நம்புவது நம் நாட்டிற்கு நல்லதல்ல.


Sun
நவ 07, 2025 09:07

டிரம்ப் நீங்க நல்லவரா? இல்லை கெட்டவரா? தெரியலியேப்பா! எனக்கே தெரியலியே! எங்களுக்கு தெரியும் நீங்க கெட்டவர்தான்னு!


சூர்யா
நவ 07, 2025 09:05

ஆபரேசன் சிந்தூரை நான்தான் நிறுத்தினேன் என்பதையும் இருபதாவது முறையாக பேட்டியில் கூறினாரா இல்லையா?


ஜெய்ஹிந்த்புரம்
நவ 07, 2025 08:56

டிரம்புக்கு அங்கே கிழிஞ்சு தொங்குது.


Palanisamy Sekar
நவ 07, 2025 10:16

என்னய்யா உன்னோட டேஸ்ட்டு


தியாகு
நவ 07, 2025 08:17

கடந்த உள்நாட்டு தேர்தலில் தோல்வி அடைந்ததும் படுத்தே விட்டாராய்யா ட்ரம்ப்.


திகழ்ஓவியன்
நவ 07, 2025 12:04

அவர் என்ன திருட்டு வோட்டில் வெற்றி பெற்றவரா என்ன


N Sasikumar Yadhav
நவ 07, 2025 13:44

உங்க கோபாலபுர எஜமானிடம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி இது 40/40 எப்படி ஜெயித்தீர்கள் என கேளுங்கள் .


Yaro Oruvan
நவ 07, 2025 13:59

அதான.. ட்ரம்ப் திருட்டு டாஸ்மாக் மாடல் அரசு மாதிரியா வெற்றி பெற்றார்...


முக்கிய வீடியோ