உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வர்த்தக பதட்டம்: அமெரிக்காவும் சீனாவும் ஜூன் 9ம் தேதி பேச்சுவார்த்தை; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!

வர்த்தக பதட்டம்: அமெரிக்காவும் சீனாவும் ஜூன் 9ம் தேதி பேச்சுவார்த்தை; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவும், சீனாவும் ஜூன் 9ம் தேதி வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து உள்ளார்.அமெரிக்கா பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருகிறது என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனையடுத்து சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க துவங்கினார். இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதிக்க, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் துவங்கியது.ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்தது. இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தன. மேலும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர், வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டது என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அமைச்சரவையின் பிரதிநிதிகள் ஜூன் 9ம் தேதி லண்டனில் சீன அமைச்சரவையை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்தார். இது குறித்து சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, தூதர் ஜேமிசன் கிரீர் ஆகியோர் ஜூன் 9ம் தேதி லண்டனில் சீன பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கூட்டம் மிக சிறப்பாக நடக்க வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M Ramachandran
ஜூன் 07, 2025 15:34

பின்பக்க முதுகில் கத்தி.


Ramesh Sargam
ஜூன் 07, 2025 12:43

டிரம்பின் செயல்பாடுகள் அந்த காலத்து துக்ளக் செயல்பாடுகளை நினைவூட்டுகிறது. நீ துக்ளக்கை பார்த்தியா என்று ஒரு சிலர் கேட்கலாம். எல்லாம் சரித்திர பாடப்புத்தகத்தில் படித்ததுதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை