உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முடிவுக்கு வந்தது வர்த்தக போர்; பரஸ்பர வரிகளை குறைக்க சீனா, அமெரிக்கா ஒப்புதல்!

முடிவுக்கு வந்தது வர்த்தக போர்; பரஸ்பர வரிகளை குறைக்க சீனா, அமெரிக்கா ஒப்புதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும், 90 நாட்களுக்கு பரஸ்பர வரிகளை அமெரிக்கா, சீனா ஆகிய இருநாடுகளும் திரும்ப பெற ஒப்புக்கொண்டன. அதேநேரத்தில் பரஸ்பர வரிகளை குறைக்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற போதே தங்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். அடுத்தடுத்து சீனாவுக்கு வரி மேல் வரி போட்டார். சீனாவும் பதிலுக்கு வரி போட துவங்கியது. இதனால் அமெரிக்கா சீனாவின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை 145% ஆக அதிகரித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ujib35fb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை, 125 சதவீதமாக உயர்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் உச்சத்தில் இருந்தது. இந்நிலையில், தற்போது வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும், 90 நாட்களுக்கு பரஸ்பர வரிகளை திரும்ப பெற சீனா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.மேலும், அமெரிக்கா சீனப் பொருட்களுக்கான வரிகளை 145 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாக குறைக்கவும், சீனா அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்த வர்த்தகம் தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Venugopal, S
மே 12, 2025 21:16

தப்புத் தப்பு...இங்கே பேரணி நடத்தியதற்காக அந்த இரு நாடுகளுக்கும் பெரும் நெருக்கடியை கொடுத்து இதனை சாதித்துக் காட்டியது நமது மாடல் ஹி...ஹி


கிஜன்
மே 12, 2025 20:59

குருப்பெயர்ச்சிக்கு அப்புறம் நல்ல செய்திகளாக வருகின்றன ....


Partha
மே 12, 2025 15:53

திருடர்கள்


Ramalingam Shanmugam
மே 12, 2025 15:20

they are doing insider trading


ASIATIC RAMESH
மே 12, 2025 15:06

இவர்கள் இருவருமே நம் அனைவரையும் முட்டாளாக்குகின்றனர். சரியான சர்வாதிகாரிகள்..


Senthoora
மே 12, 2025 18:54

இப்பதான் தெரியுதா, நான் அடிக்கிறமாதிரி அடிப்பேன் நீ அழு, நீ அடிக்கிறமாதிரி அடி நான் அழுவேன், முட்டாளுங்க நம்பட்டும்.


Priyan Vadanad
மே 12, 2025 14:48

படு சீரியஸா பாய்ந்த புலியிரண்டு இப்போ பூனையிரண்டாகி விளையாடுகின்றன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை