உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடி குறித்த கனடா பத்திரிகை செய்தி கிரிமினல்களின் வேலை என ட்ரூடோ பல்டி

மோடி குறித்த கனடா பத்திரிகை செய்தி கிரிமினல்களின் வேலை என ட்ரூடோ பல்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிந்தே நடந்ததாக, அந்நாட்டின் பிரபல பத்திரிகை வெளியிட்ட செய்தி குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பிய போது, 'உளவுத்துறையில் உள்ள சில கிரிமினல்களின் வேலை அது' என கூறினார்.வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்தாண்டு கொல்லப்பட்டார். கனடா குடியுரிமை பெற்றுள்ள அவரது கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என, அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lnxhuwer&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.இந்நிலையில், கனடாவின் முன்னணி பத்திரிகையான, 'தி குளோப் அண்ட் மெயில்' நிஜ்ஜார் கொலை குறித்து போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்ததாக, செய்தி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.அதில், 'நிஜ்ஜார் கொலை சம்பவம் குறித்த திட்டம் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு தெரியும்' என கூறப்பட்டு இருந்தது. இந்த செய்திக்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பத்திரிகை செய்தி ஊகமானது மற்றும் தவறானது என, கனடா தரப்பில் அறிக்கை வெளியானது.இந்நிலையில், ஆதாரமின்றி கனடா பத்திரிகை வெளியிட்ட செய்தி குறித்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ட்ரூடோ, “அரசின் மிகவும் ரகசியமான விஷயம் என்ற பெயரில், பத்திரிகைகளுக்கு கிரிமினல்கள் தரும் செய்திகள் தவறாக இருந்ததை நாம் பார்த்துள்ளோம். ''இதில் ஏதேனும் சதி இருக்கலாம். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கனடா மக்களை பாதுகாப்பது தான், கனடா தலைவராக என் முதன்மை பணி. அதை செய்து வருகிறேன்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramesh Sargam
நவ 25, 2024 12:46

ட்ரூடோ, நமது நாட்டில் உள்ள பல மனவளர்ச்சி இல்லாத அரசியல் தலைவர்களைப்போல.


அசோகன்
நவ 25, 2024 12:01

தேர்தலில் படு மோசமா அசிங்கபட போறார் ட்ருடோ.......


JANA VEL
நவ 25, 2024 10:51

இவர் கனடா நாட்டுக்கு ஒரு ராகுல் காந்தி.. ஒரு ஸ்டாலின் .... மொத்தத்தில் அந்த நாட்டுக்கு தேவையில்லாத ....


Ramesh Sargam
நவ 25, 2024 12:43

அந்த தேவை இல்லாததை பிடிங்கிடவேண்டும். இல்லையென்றால் ஒரே நமச்சல்தான்...


M Ramachandran
நவ 25, 2024 09:33

இன்னொரு நாட்டின் பயங்கரவாதியை ஊட்டி வளர்ப்பது அதுவும் தீவிர வாத குணமுள்ள நாடு தான். கனடா அமெரிக்காவின் கை கூலி. அமெரிக்காவின் பொம்மலாட்டத்தில் ஆடும் பொம்மை கனடா பிரதமர்.


sankaranarayanan
நவ 25, 2024 09:05

ஆதாரமின்றி கனடா பத்திரிகை வெளியிட்ட செய்தி குறித்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் இவரே பின்புறம் இருந்துகொண்டு நான் அடிக்கறாப்புலே அடிக்கிறேன் நீ அழுதுகொண்டே இரு என்பதுபோல, கனடா பிரதமர் செய்யும் பித்தலாட்டம்தான் இது இதை உலக நாடுகள் ஆரம்பத்திலேயே கிள்ளி எரியாவிட்டால் அது ஒரு பூகம்பமாக மாறும் அவர் ஆட்சில் நீடிக்க வேண்டும் என்பதற்காக அடுத்தவர்கள்மீது புனையப்பட்ட கொலைச்சரித்திரம்


SIVA
நவ 25, 2024 09:04

தீவிரவாதம் நெருப்பு போன்றது நெருப்புக்கு நல்லது கெட்டது தெரியாது, அதன் மீது எது விழுந்தாலும், அது ஏதன் மேல் விழுந்தாலும் அது நெருப்பு ஆகி விடும், தீவிரவாதம் தன்னை வளர்த்தவர்களையோ அல்லது ஆதரித்தவர்களையோ தாக்காமல் இருந்தது இல்லை, அதற்கு ஒரு காரணம் மட்டுமே தேவைப்படும், இந்திரா பெரோஸ் கான் சீக்கிய தீவிரவாத பிரச்சையால் கொல்லப்பட்டார், ராஜிவ் பெரோஸ் கான் இலங்கை தமிழர் தீவரவாத விடுதலை புலிகள் பிரச்சனையால் கொல்லப்பட்டார் , பின்லேடன் அமெரிக்காவை தாக்கினர் இவர்கள் எல்லாம் முன்பு அதே நபர்களை ஆதரித்து வளர்த்து விட்டனர், இன்று பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களால் முழுவதும் பாதிக்க பட்டு உள்ளது ....


Barakat Ali
நவ 25, 2024 08:57

கனடாவும் பாகிஸ்தானின் இன்றைய நிலையை விரைவில் அடையும் .........


கிஜன்
நவ 25, 2024 08:55

உண்மை.... எந்த நாடும் இந்த மடத்தனத்தை செய்யாது. கடின உழைப்பாளிகளான மொத்த சீக்கிய சகோதரர்களில் .... ஒரு சதவீதம் கூட அந்த கே குரூப் கிடையாது ..... கே குரூப் .... எங்க ஊர் கல்லெறி குரூப் மாதிரி.. சமூகத்திற்கே களங்கம் இவர்களால் .... ஒதுக்கி வைப்பது உங்களுக்கு நல்லது


கண்ணன்
நவ 25, 2024 08:10

இந்த ஆளே ஒரு கிரிமினல்தான்


SUBBU,
நவ 25, 2024 08:06

நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் போட்ட பதிவுதான்: Justin Trudeau அவர்களே, நீங்கள் இந்தியாவை கடிக்க வேண்டும் என்பதற்காகவே உங்கள் வீட்டின் கொல்லைப் புறத்தில் முட்டையும், பாலும் கொடுத்து வளர்த்து வரும் காலிஸ்தான் என்ற பயங்கரவாத பாம்புகளை அது இந்தியாவை மட்டுமே கடிக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். முன்பு உங்கள் முன்னோர்கள் இந்தியர்களான எங்களை பாம்பாட்டிகள் என்று இழிவு படுத்தியது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அப்படிப் பட்ட பாம்பாட்டிகளான எங்களுக்கு பாம்பின் விஷத்தை எப்படி முறிக்க வேண்டும் என்கிற வித்தை தெரியும். ஆனால் உங்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை. கனடா மக்களை பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமைதான். அதே நேரத்தில் நீங்கள் வளர்த்து விடும் காலிஸ்தான் என்ற பயங்கரவாத பாம்புகளிடமிருந்து முதலில் உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை