உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு சாதகமாக ஆட்சி நடத்தும் டிரம்ப் நிர்வாகம்: கருத்துக்கணிப்பில் தகவல்

இந்தியாவுக்கு சாதகமாக ஆட்சி நடத்தும் டிரம்ப் நிர்வாகம்: கருத்துக்கணிப்பில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆட்சியால், இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசுகிறார். மெக்சிகோ, கனடா மற்றும் சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரியையும் அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இதனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.இந்நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது பல்வேறு நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி இருந்தாலும், அது இந்தியாவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை மீண்டும் சொந்த நாட்டுக்கே அமெரிக்கா அனுப்பிய நிலையிலும், 13 சதவீதம் பேர் டிரம்ப் நிர்வாகம், இந்தியாவுக்கு சாதகமானதாகவே இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல, 31 சதவீதம் பேர் டிரம்ப்பின் ஆட்சி சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் 32 சதவீதம் பேர் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததால், இந்தியாவுடனான உறவில் எந்த மாற்றமும் இல்லை என்று பதிலளித்துள்ளனர்.அதேவேளையில், 9 சதவீதம் பேர் டிரம்ப்பின் ஆட்சி மோசமானதாக இருப்பதாகவும், 7 சதவீதம் பேர் நாட்டிற்கு பேரிடர் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

கேசவ்குமார்
பிப் 13, 2025 15:51

ட்ரம்ப் வெள்ளை மாளிகையை பெயிண்ட் அடிக்க டெண்டர் விட்டாராம். ஒரு சீனாக்காரன் 3 மில்லியன் டாலருக்கு செஞ்சு தரேன்னானாம். ஒரு ஐரோப்பாக்காரன் 6 மில்லியன் டாலர் கேட்டானாம். ஒரு இந்தியன் 10 மில்லியன் கேட்டானாம். ட்ரம்ப் சீனாக்காரனிடம் ஏன் 3 மில்லியன் கேக்கிறாய்ன போது, ஒரு மில்லியன் பெயிண்ட் விலை. ஒரு மில்லியன் கூலி. என் லாபம் ஒரு மில்லியன்நானாம். ஐரோப்பாக் காரனைக் கேட்ட போது, ரெண்டு மில்லியன் பெயின்ட்டுக்கு, ரெண்டு மில்லியன் கூலி, ரெண்டு மில்லியன் எனக்கு லாபம்னானாம். கடைசியா இந்தியனை கூப்புட்டுக் கேட்டாராம். தோ பாரு ட்ரம்ப். 10 மில்லியனில் 4 மில்லியன் உனக்கு. 2 மில்லியன் எனக்கு. மூணு மில்லியனை சீனாக்காரனுக்கு குடுத்து வேலையை முடிச்சிடலாம்னானாம். ட்ரம்ப் இன்னும்.ஒரு மில்லியன் இருக்குமேன்னாராம். அதுவா ஒரு வேளை ஐரோப்பாக் காரன் கேஸ் போட்டா லஞ்சமா ஒரு மில்லியன் குடுத்து அமுக்கிறலாம்னானாம். ஆடிப்போன ட்ரம்ப் இந்தியனுக்கே காண்டிராக்டை குடுத்துட்டாராம். யாருகிட்டே வாலாட்டறீங்க?


enkeyem
பிப் 13, 2025 16:08

திராவிட புத்தி இப்படித்தான் தாய் நாட்டின்மீதே பழிபோடும்


vivek
பிப் 13, 2025 18:24

இந்த கருத்து உன் பிறப்பை கேவலப்படுத்தி விட்டது....பாவம் யார் பிள்ளையோ


தங்கசாமி
பிப் 13, 2025 20:40

உண்மைதான். ரஷியா கிட்டே ஆயில்.குறைச்ச விலைக்கு ஐரோப்பாவுக்கு வித்து, கேஸ் போடாம இருக்க அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கி சமாளிச்சோமே.


djivagane
பிப் 13, 2025 14:54

அமெரிக்காவுக்கு சீனாவய் எதிர்க்க இந்தியா தேவெய்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 13, 2025 12:21

கொஞ்சம் கூட யோசிக்காம நம்பிண்டு, நிஜம் எழுதறவங்கள் மீது விமர்சனம் எழுதி அல்ப சந்தோஷம் பெறுகிறார்கள் சிலர்.


guna
பிப் 13, 2025 13:24

சில வயிதெரிசல் கேசுகள் இப்படி குறுகாள ஒடுதுங்க


Gobi
பிப் 13, 2025 11:52

அமெரிக்கா செய்த மாதிரி இந்தியா பங்களா, பாக்கி நாட்ட ஆட்களை அதே மாதிரி அனுபனும்


Kalyanaraman
பிப் 13, 2025 10:52

13+31+32+9+7=92% மிச்சம் 8% எங்கே போச்சு???


Radhakrishnan Harichandran
பிப் 13, 2025 11:39

33 each — are from Gujarat and Haryana, followed by 30 from Punjab, Three from Maharashtra and Uttar Pradesh each, and two are from Chandigarh.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 13, 2025 10:35

போங்க சார், கடுப்பேத்தற மாதிரி காமெடி பண்ணிக்கிட்டு.....


guna
பிப் 13, 2025 10:48

என்ன பண்றது வைகுண்டம்....உன் gst அறிவு போல...அதாவது 29% இல்லயே...காமெடி பீஸ்...


baala
பிப் 13, 2025 10:08

அதெப்படி? அவன் அதிக வரி விதிக்கிறான் நம் பொருளுக்கு. அப்புறம் எப்படி சாதகமாக. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நல்லது.


தனேஷ்
பிப் 13, 2025 09:26

13 மார்க் வாங்குனாலும் அடுத்தவனை விட அதிகம் தான்.


Mediagoons
பிப் 13, 2025 09:05

அமெரிக்காவும் ரஸ்யாவும் பல உலக நாடுகளும் மோடி ஆட்சிக்கு வரும் முன்னரே இந்தியாவுக்கு ஆதரவாகத்தான் செயல் பட்டன


Amar Akbar Antony
பிப் 13, 2025 13:14

எப்புடி? ஏய் இங்கே கையெழுத்து போடு இந்தா, நான் செய்யும் அணைத்து பொருட்களும் இந்தியா வாங்கணும் சொன்னதுக்கெல்லாம் ஆமாம் சாமின்னு சொல்லணும் இப்படியெல்லாம் வெளியிருந்து எம் பாரதநாட்டை தாங்கள் சொல்லும் ரஷ்யா அமெரிக்கா ஆண்டு கொண்டிருந்த காந்தி குடும்பங்கள் ஆட்சி செயும் காலமல்ல. இது மோடி சிங்கம் பாரதத்தின் தலைமகன்


Mohammad ali
பிப் 13, 2025 08:14

ஹனிஃபீ நல்லா கொட்டிடுச்சி


வாய்மையே வெல்லும்
பிப் 13, 2025 08:37

சொரணை உள்ள ?? ஆளாச்சே


சமீபத்திய செய்தி