உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு ஆதரவான மக்கள் பிரசாரத்திற்கு ஆதரவு; எலான் மஸ்கை வம்பிழுத்த டிரம்ப் ஆலோசகர்

இந்தியாவுக்கு ஆதரவான மக்கள் பிரசாரத்திற்கு ஆதரவு; எலான் மஸ்கை வம்பிழுத்த டிரம்ப் ஆலோசகர்

வாஷிங்டன்: இந்தியாவுக்கு ஆதரவாக மக்களின் கருத்துகளை எக்ஸ் வலை தள பதிவில் வெளிப்படுத்துவதன் மூலம் பிரசாரத்தை அனுமதிக்கிறார் என்று எலான் மஸ்கை, டிரம்ப் ஆலோசகர் பீட்டர் நவ்ரோ குற்றம்சாட்டி உள்ளார்.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம், உக்ரைன் போருக்கு இந்தியா நிதி உதவி செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் நவ்ரோ எக்ஸ் வலைதள பதவில் குற்றம்சாட்டி இருந்தார். அவரின் இந்த விமர்சனத்திற்கு இந்தியாவில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. அதே நேரத்தில் நவ்ரோவின் கருத்தை எக்ஸ் பயனாளர்கள் உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தினர். கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது வெறுமனே லாபத்திற்காக அல்ல, எண்ணெய் பாதுகாப்புக்கு என்று சுட்டிக்காட்டினர். ரஷ்யா-இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டை எக்ஸ் பயனாளர்கள் ஏற்க மறுத்ததால் நவ்ரோ அதிருப்தி அடைந்துள்ளார்.தனது கோபத்தை எக்ஸ் வலைதள பதிவின் மூலம் காட்டிய நவ்ரோ, மக்களின் முட்டாள்தனமாக பதிவுகளை எலான் மஸ்க் அனுமதிக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது; மக்களின் பதிவுகளில் பிரசாரத்தை (எலான் மஸ்க்) அனுமதிக்கிறார். கீழே இருக்கும் முட்டாள்தனமான பதிவும் அப்படித்தான். லாபம் பெறவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்குகிறது.உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கும் முன் இந்தியா எதையும் வாங்கவில்லை. உக்ரேனியர்களை கொல்வதை நிறுத்துங்கள். அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளை பறிப்பதை நிறுத்துங்கள்.இவ்வாறு தமது எக்ஸ் வலைதள பதிவில் நவ்ரோ குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sankaranarayanan
செப் 07, 2025 17:37

திராவிட மாடல் அரசில் பல கட்சி பிரமுகர்கள் சாராய கம்பெனி நடத்தி வருகிறார்கள் நாட்டில் பல பெண்களை விதவைகளாக ஆக்கிவருகிறார்கள் அதுபோன்று அதாணியும் அம்பானியும் செய்யவில்லையே நாட்டின் மக்களுக்காகவே உழைக்கிறார்கள் மலிவான விலையில் பெட்ரோல் மக்களுக்கு தருகிறார்கள் இதில் என்ன தவறு இருக்கிரது


kalyanasundaram
செப் 07, 2025 16:59

Indian Papoo and American Papoo will spoil the respective countries


நிக்கோல்தாம்சன்
செப் 07, 2025 16:31

இந்த பீட்டரின் நடவடிக்கைகள் ட்ரம்ப் தோற்கடித்துவிடும் போல இருக்கு


Karthik
செப் 07, 2025 13:23

நீங்கள் மட்டும் ஏன் இன்னும் ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை எப்போது முழுவதுமாக நிறுத்தப் போகிறீர்கள்?


Rajasekar Jayaraman
செப் 07, 2025 13:13

உக்ரைனுக்கு நீங்கள் தரும் ஆயுதங்களால் தான் போர் நடக்கிறது அதை நிறுத்தினால் போர் தானாக முடியும் போருக்கு காரணம் ட்ரம்பே தவிர இந்தியாவோ சீனாவோ அல்ல டிரம்ப் மட்டுமே.


M Ramachandran
செப் 07, 2025 12:27

வம்பனுக்கு வம்பன் வையகத்தில் உண்டு என்பது நிரூபணமாகிறது. அஙகும் ஒரு ராகுலு உண்டு போலாயிருக்கு


K.Ravi Chandran,Pudukkottai
செப் 07, 2025 12:07

வாய்யா! வா! ஏற்கெனவே அந்த டிரம்பர் ஒரு மாதிரி. இதுல நீ வேற பக்கத்திலேயே உக்காந்து நல்லா ஏத்தி விட்டுக்கிட்டு இருக்கே!


Rameshmoorthy
செப் 07, 2025 11:24

Ukraine buy Russian oil through India, let America inform Ukraine not to buy oil


Svs Yaadum oore
செப் 07, 2025 11:00

உலகிலேயே மிக பெரிய பெட்ரோலியம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குஜராத் ஜாம் நகரில் ரிலையன்ஸ் நடத்தும் ஆலை ..இதனால் இந்தியாவுக்கு பெட்ரோலியம் எண்ணெய் பாதுகாப்பு மற்றும் அந்நிய செலவாணி ....ரஷ்யா இறக்குமதியால் பயன் அடைந்தது மற்ற இந்தியா பொதுத்துறை நிறுவனங்கள் ....ஆனால் இதை குறை சொல்லும் விடியல் திராவிடனுங்க நடத்துவது சினிமா ட்ராமா கம்பெனி கார்பொரேட் சாராய போதை கம்பெனி ...


Svs Yaadum oore
செப் 07, 2025 10:44

இந்த விடியல் திராவிடனுங்க ரஷ்யா எண்ணெய் இறக்குமதியால் அம்பானி லாபம் அம்பானி லாபம் என்று கூவறானுங்க ...விடியலுக்கு திறமை இருந்தால் விடியல் நடத்தும் கார்பொரேட் சாராய கம்பெனி போதை கம்பெனி சினிமா கம்பெனிகளை மூடிவிட்டு அம்பானி நடத்தும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை துவங்கி நடத்தட்டுமே ......எவன் வேண்டாம்னு தடுத்தது ??..அதுக்கு துப்பில்லை ...அம்பானி ஜாம் நகர் சுத்திகரிப்பு ஆலையில் வேலை பார்க்கும் தமிழ் நாட்டுக்காரன் எத்தனை பேர்??....