உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பரஸ்பரம் புகழ்ந்து தள்ளிய டிரம்ப் - ஷெபாஸ் ஷெரீப்

பரஸ்பரம் புகழ்ந்து தள்ளிய டிரம்ப் - ஷெபாஸ் ஷெரீப்

வாஷிங்டன் : பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அமெரிக்க அதிபர் டிரம்ப், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோரை வெள்ளை மாளிகையில் உள்ள தன் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட உலகளாவிய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், அதிபர் டிரம்பை பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார். இதற்கு டிரம்ப் வரவேற்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவுகள் பதற்றமாக உள்ள நிலையில், இச்சந்திப்பு நடந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, ஷெரீப் மற்றும் முனீரை சிறந்த தலைவர்கள் என்று டிரம்ப் பாராட்டினார். அதுபோல் டிரம்பை மிகச் சிறந்த தலைவர் என ஷெரீப் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

nisar ahmad
செப் 30, 2025 17:27

ஐயா 56 இஞ்சி பிரச்சாரம் பண்ணியதும் சங்கி கூட்டம் தலையில் வைத்து கூத்தாடியதும் அப் கி பார் டிரம் சர்கார்.ர்ர்ர்ர்ர்ர் எல்லாம் போச்சா.


Shivakumar
செப் 27, 2025 12:34

ஷெரீப் மற்றும் முனீரை சிறந்த தலைவர்கள் என்று டிரம்ப் பாராட்டினார். அதுபோல் டிரம்பை மிகச் சிறந்த தலைவர் என ஷெரீப் பாராட்டினார். ஒரு திருடனை இன்னொரு திருடன் பாராட்டி பேசுகின்றான். அவ்வளவுதான் ..


Shivakumar
செப் 27, 2025 12:33

இந்த மூன்று திருடர்களிடம் இந்தியா மிகவும் விழிப்போடு இருக்கனும். இந்த மூன்று பேருமே பிறவி பைத்தியங்கள்.


,chandra
செப் 27, 2025 09:09

சும்மா ஆடாது


Sun
செப் 27, 2025 08:49

அமெரிக்காவுடனான உறவு இந்தியாவிற்கு மிகவும் ஆபத்தானது. இந்தியாவை சுற்றிலும் செக் வைக்க அமெரிக்கா முயல்கிறது. இந்த இடியட் மிகவும் ஆபத்தானவன். இந்தியா எங்களது நண்பன் என அமெரிக்கா கூறுவது எல்லாம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.


முக்கிய வீடியோ