உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவை தாக்க நினைத்தால்...; டிரம்ப் பகீர் எச்சரிக்கை

அமெரிக்காவை தாக்க நினைத்தால்...; டிரம்ப் பகீர் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'அமெரிக்காவை தாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கொல்வோம்' என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p7sv5oxj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சோமாலியாவில் குகைகளில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழுவினர் மீது வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்கா வான்வழி தாக்குதலை துவங்கி உள்ளது.இது குறித்து, டொனால்டு டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குகைகளில் பதுங்கியிருந்த கொலையாளிகள் அமெரிக்காவையும், நமது நட்பு நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றனர். அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளேன்.எந்த வகையிலும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல், மேலும் பல பயங்கரவாதிகள் மற்றும் குகைகளை அழித்துள்ளோம். அமெரிக்காவை தாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கொல்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இது குறித்து, சோமாலியா ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது கூறியதாவது: பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதில் சோமாலியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் வலுவான உறவு இருக்கிறது. அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையின் கீழ், சர்வதேச பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடரும் தாக்குதல்களை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

வல்லவன்
பிப் 02, 2025 22:38

அதிரடி அமர்க்களம் அட்டகாசம் அமோகம்


Murthy
பிப் 02, 2025 16:13

சோமாலியாவில் உனக்கு அங்கு என்ன வேலை ??? அங்கிருக்கும் பெட்ரோல் வளங்களை கொள்ளையடிக்கும் கொள்ளைக்கூட்ட தலைவன்தான் USA


Barakat Ali
பிப் 02, 2025 14:44

இதைப்போல இந்தியாவுக்கு ஒரு நேஷனலிஸ்ட் தேவை .......


பேசும் தமிழன்
பிப் 02, 2025 15:23

அதற்க்கு முதலில் கூட இருந்தே குழி பறிக்கும்.... சொந்த நாட்டை காட்டி கொடுக்கும் இந்தி கூட்டணி ஆட்களை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்....பிறகு தேச விரோத சக்திகள் தானாகவே அடங்கி விடுவார்கள்.


நிக்கோல்தாம்சன்
பிப் 02, 2025 12:36

கடலில் கொள்ளையடிக்கும் மக்களையும் கொன்றழிக்க வேண்டும்


Kasimani Baskaran
பிப் 02, 2025 08:07

அப்படியே திராவிட சமூக தீவிரவாதிகளிடம் இருக்கும் அமெரிக்க சொத்துக்களை முடக்க வேண்டும்.


முருகன்
பிப் 02, 2025 07:46

தாக்க நினைப்பவர்கள் பிரச்சினை இது அப்பாவி மக்களை காப்பது ஒரு அரசின் கடமை ஆகும்


Minimole P C
பிப் 02, 2025 08:09

Mr Trump is different from other politicians who at the cost of people and nation comes to power. But Trump is true nationlist.


Duruvesan
பிப் 02, 2025 09:35

சூராசம்ஹாரம் தொடங்கி இருக்கு, உக்கிரம் ஆகும், தீவிரவாதி மொத்தம் அழிக்க பட அந்த முருகன் அருள் புரிவார்


சமீபத்திய செய்தி