வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவனுக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை என்பது இப்போது தெளிவாகிறது. எங்க வந்து என்ன வேலை பார்த்துகிட்டு இருக்கார்.
ஆனால் நீ சைக்கோ. உன்னிடத்தில் இருந்து சற்று தள்ளி இருப்பதே அவருக்கு நல்லது.
கெய்ரோ: இத்தாலி பிரதமர் மெலோனி மிகவும் அழகானவர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்ணித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் முன் வைத்த 20 அம்சம் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் காசா போர் முடிவுக்கு வந்திக்கிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் கையெழுத்தானது.போரால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்ப ஆரம்பித்து இருக்கின்றனர். இருதரப்பிலும் பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில், காசா உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு விஷயங்களை பற்றி குறிப்பிட்டாலும் இத்தாலி இளம்பெண் பிரதமர் மெலோனியை அவர் அனைவர் முன்னிலும் புகழ்ந்து தள்ளியது உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் புருவத்தை உயர்த்தி இருக்கிறது.டிரம்ப் மேலும் பேசியதாவது; இங்கே நம்முடன் பெண் ஒருவர் இருக்கிறார். அதுவும் இளம்பெண், அதைச் சொல்ல எனக்கு அனுமதி கிடையாது இருந்தாலும் சொல்கிறேன், அவர் (மெலோனி) ஒரு அழகான இளம்பெண். அமெரிக்காவில் ஒரு பெண் அழகாக இருக்கிறார் என்று நீங்கள் சொன்னால் அவ்வளவுதான், உங்களின் அரசியல் வாழ்க்கை முடிந்து விடும். ஆனால் நான் அப்படியல்ல, அவரை வர்ணிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்.இவ்வாறு டிரம்ப் பேசினார். டிரம்பின் இந்த வர்ணனையை எதிர்கொண்ட இத்தாலி பிரதமர் மெலோனி எந்த முக பாவனையையும், உணர்ச்சிகளையும் அங்கே வெளிப்படுத்தவில்லை. 30 நாடுகளின் உலக தலைவர்கள் கலந்து கொண்ட இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஒரேயொரு பெண் தலைவர் மெலோனி என்பது குறிப்பிடத்தக்கது.
இவனுக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை என்பது இப்போது தெளிவாகிறது. எங்க வந்து என்ன வேலை பார்த்துகிட்டு இருக்கார்.
ஆனால் நீ சைக்கோ. உன்னிடத்தில் இருந்து சற்று தள்ளி இருப்பதே அவருக்கு நல்லது.