உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரதமர் மோடி அழகானவர், சாதனையாளர்: சர்வதேச மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப்

பிரதமர் மோடி அழகானவர், சாதனையாளர்: சர்வதேச மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கியோங்ஜூ(தென் கொரியா): ''இந்திய பிரதமர் மோடி நல்ல அழகான தோற்றமுள்ளவர், சாதனையாளர். அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் எனக்கு உண்டு,'' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.தென்கொரியாவில் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாடு தொடங்கியது. இதில் பங்கேற்க தென்கொரியா வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கியாங்ஜூ நகரம் சென்ற அவர் மாநாடு நடைபெறும் அரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உலகளாவிய வர்த்தக தலைவர்கள் திரண்டிருந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=prhxkc0a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டிரம்ப் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த அவர்கள் அனைவரும் எழுந்து நின்று, கைகளை தட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர். நிகழ்ச்சியில் பின்னர் டிரம்ப் பேசியதாவது; இந்தியாவுடன் நான் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறேன். பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் உள்ளது. எங்கள் இருவர் இடையேயும் சிறந்த உறவு இருக்கிறது. அதேபோல பாகிஸ்தான் பிரதமரும் ஒரு சிறந்த மனிதர். அவர்களுக்குள் ஒரு பீல்டு மார்ஷல் இருக்கிறார். அவர் சிறந்த போராளி என்பதால் அப்படி அழைக்கப்படுகிறார். அவர்கள் அனைவரையும் நான் அறிவேன். பிரதமர் மோடியை அழைத்து உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என்றேன். இல்லை... இல்லை நாம் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். நான் இல்லை, முடியாது என்றேன். நீங்கள் பாகிஸ்தானுடன் சண்டையிடுகிறீர்கள். எனவே என்னால் முடியாது என்றேன்.அதன்பின்னர் பாக்.கை நான் அழைத்தேன். நீங்கள் (பாகிஸ்தான்) இந்தியாவுடன் சண்டை போடுகிறீர்கள், உங்களுடன் எந்த வர்த்தக ஒப்பந்தமும் செய்ய முடியாது என்று கூறினேன். உடனே அவர்கள், 'இல்லை, முடியாது, எங்களை(இந்தியா, பாக்) சண்டையிட அனுமதிக்க வேண்டும்' என்று என்னிடம் கூறினர். அதற்கு நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்.பிரதமர் மோடி மிகவும் அழகான மனிதர். ஒரு சாதனையாளர், கடினமானவர். இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் போனில் அழைத்து, 'நாங்கள் புரிந்து கொண்டோம்' என்றனர், சண்டையையும் நிறுத்திவிட்டனர். இது எப்படி இருக்கிறது? ஆச்சரியமாக அல்லவா இருக்கிறது. பைடன் இப்படி (டிரம்ப் போர் நிறுத்தம் கோரி எடுத்த முயற்சிகள் போல) செய்திருப்பார் என்று நினைக்கிறீர்களா? அப்படி இருக்காது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு டிரம்ப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

சாமானியன்
அக் 29, 2025 22:28

ராத்திரி செகண்ட் ஷோ பார்த்துட்டு 2 மணிக்கு கனவு காணுவார் போல இருக்கிறது.


M.Sam
அக் 29, 2025 20:27

அம்புட்டும் பொய் பொய் பொய்


RAJ
அக் 29, 2025 20:09

திருந்தமாட்டார் போல இருக்கே .. காதில வச்ச குறி .. கொஞ்சம் இறக்கி வச்சு இருக்கலாம்.


Balamurugan
அக் 29, 2025 19:36

உலகத்திலேயே ஒரு கேடுகெட்ட திருட்டுப்பய இவர் தான்.


Anbarasu K
அக் 29, 2025 19:09

சாபக்கேடு


Anbarasu K
அக் 29, 2025 19:08

இவரெல்லாம் அமெரிக்கா வின் சாபக்கேடு என்ன சொல்றது


Anbarasu K
அக் 29, 2025 19:04

இந்த கலியுகத்துல இவர் ஒரு அமெரிக்கா வின் சாபக்கேடு இவர் பல மக்களோட வாழ்க்கையை அழிக்காம போகமாட்டார் போல


sankaranarayanan
அக் 29, 2025 18:51

அண்டப்புழுகன் ஆகாச புழுகனை பார்த்திருக்கிறோம் ஆனால் இப்படி ஒரு பெரிய தேசத்தின் தலைவர் பேசி இந்த ஜென்மத்தில் யாருமே கண்டிருக்க முடியாது அதுதான் டிரம்பின் அரசியல் லீலைகள். பைடன் இப்படி டிரம்ப் போர் நிறுத்தம் கோரி எடுத்த முயற்சிகள் போல செய்திருப்பார் என்று நினைக்கிறீர்களா? என்றெல்லாம் இவர் கேட்டு என்ன பயன் இவர் செய்ய முயற்சிப்பதை சொன்னாலே பொதுமய்யா எதற்காக அடுத்தவரை கம்பேர் செய்ய வேண்டும்.


Ram
அக் 29, 2025 18:05

நாடி நரம்பு ரத்தத்துல கலப்படம் இருக்கறவனால மட்டும்தான் எப்படி புத்தியில்லாமல் பேசமுடியும்


சூரியா
அக் 29, 2025 17:54

மோடி மீது அன்பாம், பாசமாம். ஆனால் CIA வை ஏவிவிட்டு மோடியைக் கொல்லப் பார்ப்பாராம்! நமது ராகுல் ஒரு மக்கு என்றால், டிரம்ப் ஒரு விஷம்.


புதிய வீடியோ