உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா தாக்குதலை நிறுத்த சீனா உதவும்: டிரம்ப் நம்பிக்கை

ரஷ்யா தாக்குதலை நிறுத்த சீனா உதவும்: டிரம்ப் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தச் செய்வதற்கு சீனா உதவி செய்யும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால், இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் வெறுத்துப் போன டிரம்ப், ' ஒவ்வொரு முறையும் புடினுடன் பேசும்போது நன்றாக பேசுகிறார். ஆனால், போர் மட்டும் நிற்காமல் தொடர்ந்து கொண்டே செல்கிறது' என விரக்தியுடன் கூறினார். இதனையடுத்து அந்நாட்டுக்கு எதிராக தடைகளை விதித்துள்ளார்.இந்நிலையில் மலேஷியாவில் நடக்கும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்க டிரம்ப் கோலாலம்பூர் செல்கிறார். இங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.இந்த நிலையில் டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: உக்ரைன் மீதான தாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். இந்த தாக்குதலை ரஷ்யா நிறுத்துவதற்கு தேவையான உதவிகளை சீனா செய்வதை நான் பார்க்க விரும்புகிறேன். ஷி ஜின்பிங் உடன் எனக்கு சிறந்த நட்பு உள்ளது. இந்த போர் நிறுத்தப்படுவதை பார்க்க அவரும் விரும்புகிறார். இவ்வாறு டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Shakthitoolroom@gmail.com
அக் 26, 2025 09:26

உங்களால் முடியாததால் அடுத்தவங்களை கோர்த்து விடக்கூடாது. உங்களுக்கு எப்படி நோபல் கிடைக்கும். அவனவன் பிரச்சனையை அவனவன் பார்த்து கொள்வார்கள்


MARUTHU PANDIAR
அக் 25, 2025 21:09

ஆரம்பிச்சாச்சா? இதுக்கும் முடிவில்லை, அதுக்கும் முடிவில்லை. மோடியை விட்டுவிட்டு ஜீ பிங்கை பிடிச்சாச்சு.


முக்கிய வீடியோ